Medha Shankar: ‘என்னோட அக்கவுண்ட்ல வெறும் 257 ரூபாதான்..’ - மேடையில் ஷாக் கொடுத்த 12th ஃபெயில் நடிகை!
Feb 23, 2024, 04:59 PM IST
2020 ஆம் ஆண்டு உலகில் உள்ள அனைவருக்குமே மோசமான ஆண்டாக இருந்தது. எனக்கும் அது மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது.
ஐபிஎஸ் ஆஃபீசர் மனோஜ்குமார் மற்றும் ஐஆர்எஸ் ஆஃபீசர் ஷரத்தா ஜோஷி ஆகியோரின் ரியல் லைஃப் ஸ்டோரியை மையப்படுத்தி கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் 12th ஃபெயில்.
வினோத் சோப்ரா இயக்கத்தில் நடிகர் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் மேதா ஷங்கர்.
இவருக்கு ஐஎம்டிபி வழங்கும் ‘பிரேக் அவுட் ஸ்டார்’ விருது ஸ்டார்மீட்டர் விருது நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பேசிய நடிகை மேதா ஷங்கர், “12th ஃபெயில் படத்திற்கான ஆடிஷன் சென்ற போதே நான் அந்தப்படத்தின் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு தேர்வாவேன் என்று உள்ளுணர்வு சொன்னது” என்று கூறினார்.
மேலும் தன்னுடைய கடினமான காலங்களை பற்றி பேசிய மேதா, “ 2020 ஆம் ஆண்டு உலகில் உள்ள அனைவருக்குமே மோசமான ஆண்டாக இருந்தது. எனக்கும் அது மிகவும் கஷ்டமான காலமாக இருந்தது. காரணம், நான் மிகவும் உடைந்து போய் இருந்தேன். என்னுடைய அக்கவுண்டில் வெறும் 257 ரூபாய் மட்டுமே இருந்தது.
நான் நடிகையாக வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு கிளாமர், அழகு, துணிகள், பிரபலம் என எதுவும் காரணம் கிடையாது. நான் நடிகையாக மாற வேண்டும் என்று விரும்பியது இந்த கலையை ஆழமாக நேசித்ததின் விளைவே. நடிப்புதான் எனக்கான அழைப்பு என்று எனக்கு தெரியும்.
12th ஃபெயில் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த போது நான் என்னுடைய தந்தையை கட்டிப்பிடித்து அழுதேன். பெங்களூரில் இருக்கும் என்னுடைய சகோதரனுக்கு போன் செய்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு அழுதேன். அது எனக்கு மிகவும் எமோஷனலான மொமண்ட்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்