Annamalai: ’பணம் கொடுத்ததை நிரூபித்தால் அரசிலைவிட்டு விலகுகிறேன்!’ வாக்களித்த பின் அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
Apr 21, 2024, 01:54 PM IST
”எங்கே இருந்தாலும், இன்று மாலைக்குள் உங்கள் வாக்கை நிச்சயம் செலுத்துங்கள். பெரிய மாற்றம் வர வாக்களியுங்கள்”
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியாவில் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
அப்போது பேசிய அவர், தேர்தல் திருவிழா நாளில் நாம் அனைவரும் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். ஜனநாயகத்தின் வலிமை என்பது வாக்காளர்கள்தான், அவர்கள்தான் நாட்டை யார் ஆள்வது என்பதை உறுதி செய்கின்றனர். அதனால் சிந்தித்து எல்லோரும் வாக்களிப்போம். நான் என்னுடைய ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளேன்.
என்னுடைய சொந்த ஊரில் பூத் இருக்க கூடிய ஊத்துப்பட்டியில் எல்லோர் முன்னிலையிலும் எனது ஜனநாயக கடமையை ஆற்றி உள்ளேன்.
எங்கே இருந்தாலும், இன்று மாலைக்குள் உங்கள் வாக்கை நிச்சயம் செலுத்துங்கள். பெரிய மாற்றம் வர வாக்களியுங்கள்.
முழு தேர்தலும் மிகமிக நேர்மையாக நடத்தி உள்ளேன். பணத்தை வைத்து கோவையை வென்றுவிடலாம் என்று நினைக்கின்றனர். கோவையில் பாஜக சார்பில் ஒரு மனிதனுக்கு பணம் கொடுத்து உள்ளனர் என்று சொன்னால் அந்த நாளில் நான் அரசியலைவிட்டு வெளியேறிவிடுவேன்.
இது ஒரு தர்மத்தின் போராட்டம், நியாத்தின் போராட்டம் என்பதால் களத்தில் எல்லோரையும் எதிர்த்து நின்று கொண்டு இருக்கின்றேன். பணத்தை வைத்து கோயம்புத்தூர் மக்களை வாங்கிவிடலாம் என திமுக மற்றும் வேறுவேறு கட்சிகள் நினைக்கின்றனர்.
ஆனால் அதற்கு மக்கள் தகுந்த பதில் அடி கொடுப்பார்கள். பண அரசியல் என்பது இந்த தேர்தலோடு முடிந்துவிட்டது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தலுக்கு முன்னால் வந்த பணம் கொடுத்தால் ஓட்டு போடுவார்கள் என்பது முடிந்துவிட்டது.
திமுக, உளவுத்துறை, தலைமை செயலாளர், டிஜிபி, ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் ஆபிசரில் யாராவது ஒருத்தர் பாஜக பணம் கொடுக்க முயன்றது என்பதை சொல்லட்டும் நான் அரசியலைவிட்டு வெளியேறிவிடுகிறேன்.
எந்த வாக்காளரை வேண்டுமானாலும் கொண்டு வந்து நிறுத்துங்கள். ஜூன் 4 ஆம் தேதி தமிழகம் முழுவதுமே மிகப்பெரிய மாற்றம் இருக்கும். அதற்கு மேல் நான் அரசியல் பேச விரும்பவில்லை.
பிரதமருக்கு தமிழ மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என முதல்வர் பேசுகிறார் என்றால் 39 தொகுதிகளையும் வென்று கொடுப்பார்கள் என்று அர்த்தம் என அண்ணாமலை பேசினார்.
இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் 2024:
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.