Rajput: ’உத்தர பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம்!’ ராஜ்புத் சமூகத்தினர் அதிரடி முடிவு! ஏன் தெரியுமா?
"பாரதிய ஜனதா கட்சி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளர் தேர்வில் ராஜ்புத் சமூகத்தை புறக்கணித்ததன் மூலம் அவர்களை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புறக்கணிப்பு முடிவை எடுத்து உள்ளதாக அவர் கூறினார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டோம் என ராஜ்புத் சமூகத்தினர் முடிவு செய்து உள்ளனர்,
இங்குள்ள ராஜபுத்திரர்கள் மகாபஞ்சாயத்தை நடத்தி, கட்சி டிக்கெட் விநியோகத்தின் போது சமூகத்தை புறக்கணித்ததாகக் கூறி முசாபர்நகர், கைரானா மற்றும் சஹாரன்பூர் மக்களவைத் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை புறக்கணிக்க முடிவு செய்ததாக ஒரு தலைவர் கூறி உள்ளார்.
கிசான் மஸ்தூர் சங்கதன் தேசியத் தலைவரும், அப்பகுதியின் முக்கிய ராஜ்புத் தலைவருமான தாக்கூர் பூரன் சிங், கேடா பகுதியில் செவ்வாயன்று 'மகாபஞ்சாயத்துக்கு' அழைப்பு விடுத்து இருந்தனர். இதில் முசாபர்நகர் தொகுதி முழுவதும் பரவியுள்ள சௌபிசா ராஜ்புத் சமூகத்தினர் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து மற்ற ராஜ்புத் சமூகத்தினர் கலந்து கொண்டனர்.
