Lunar eclipse: சந்திர கிரகணத்தால் மிக மோசமாகப் பாதிக்கப்படும் 4 ஆங்கில ராசியினர்
Dec 26, 2023, 02:31 PM IST
இந்த ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழ்கிறது. காலை 9.12 மணியிலிருந்து மாலை 6.18 மணி வரை கிரகணம் ஏற்படும். இந்த சந்திர கிரகணம் கார்த்திக் பூர்ணிமா என்று அழைக்கப்படுகிறது.
நாசாவின் கூற்றுப்படி அடுத்த முழு சந்திர கிரகணம் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதிக்குள் நிகழும் எனக் கூறப்படுகிறது. இன்று நிகழும் சந்திர கிரகணத்தால் ஆங்கில ராசிக்காரர்களுக்கு ஏற்படக்கூடிய பாதகங்கள் குறித்து இங்கு காணலாம்.
சமீபத்திய புகைப்படம்
ஏரிஸ்-
இந்த காலகட்டத்தில் ஏரிஸ் ராசிக்காரர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். கடும் நிதி நெருக்கடி ஏற்படும். அத்துடன் உடல் நலக்குறைவும் உண்டாகும். கிரகணத்துக்குப் பின் எந்த முதலீடுகளிலும் பணத்தை செலுத்தக்கூடாது. இதனால் அதிக இழப்புகள் ஏற்படும் என்பதால் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
டாரஸ்-
தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் அல்லது தேர்வு முடிவை எதிர்பார்ப்பவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்தபடி நல்ல முடிவு வராது. இதனால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்படும் என்பதால் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாவர். காரியம் சாதிப்பதில் உற்சாகம் குறையும்.
ஜெமினி-
உங்களுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் என்று இதுநாள் வரை நம்பியிருந்தவர்கள் துரோகம் செய்யக் கூடும். எந்தவொரு சூழ்நிலையிலும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுத்து செயல்பட வேண்டியது அவசியம். கஷ்டமான சூழ்நிலை ஏற்பட்டாலும் அதை மிகுந்த மன தைரியத்துடன் எதிர்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிகுந்த சிரமங்களுக்கு ஆளாக நேரிடும்.
சாஜிட்டேரியஸ்-
சந்திர கிரகணத்தின் விளைவாக பல்வேறு சோதனைகளுக்கு ஆளாக நேரிடும். சில சமயங்களில் என்ன செய்வதென்றே தெரியாத நிலைமை ஏற்படலாம். இத்தகைய சூழ்நிலைகளில் மிகவும் நிதானமாக இருந்து பிரச்னைகளில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். சிரமங்கள் தானாக விலகத் தொடங்கும். அதுவரை பொறுமை மிக மிக அவசியமாகும். பணச்செலவுகளைத் தள்ளிப் போடுங்கள் அல்லது முற்றிலும் தவிர்த்து விடுங்கள். உணர்ச்சிகளைத் தூண்டும் சம்பவங்கள், மன உளைச்சல்கள், பணச்சிக்கல்கள் ஏற்படும் என்பதால் கூடுதல் கவனம் தேவை. உங்களது தன்னம்பிக்கையை கைவிடாமல் எதிர்வரும் பிரச்னைகளைத் தைரியமாகக் கையாளுவதற்கு ஆயத்தமாகுங்கள்.
டாபிக்ஸ்