தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Lord Venus Change: மார்ச் மாதத்தில் 2 முறை இடத்தை மாற்றும் சுக்கிரன்.. விஜயம் பெறும் ராசிகள்!

Lord Venus Change: மார்ச் மாதத்தில் 2 முறை இடத்தை மாற்றும் சுக்கிரன்.. விஜயம் பெறும் ராசிகள்!

Marimuthu M HT Tamil

Feb 29, 2024, 02:12 PM IST

google News
மார்ச் மாதத்தில் இரண்டு முறை ராசிகளை மாற்றும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.
மார்ச் மாதத்தில் இரண்டு முறை ராசிகளை மாற்றும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மார்ச் மாதத்தில் இரண்டு முறை ராசிகளை மாற்றும் சுக்கிர பகவானால் அதிர்ஷ்டம்பெறும் ராசிகள் குறித்துக் காண்போம்.

மார்ச் மாதத்தில் சுக்கிர பகவான், இரண்டு முறை ராசிகளை மாற்றி சஞ்சரிக்கப் போகிறார். வரும் மார்ச் மாதம் 7ஆம் தேதி கும்ப ராசியில் முதல் பெயர்ச்சியும், மார்ச் 31ஆம் தேதி மீன ராசியில் இரண்டாம் முறையாகவும் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிர பகவான் வலுவாக இருந்தால், செல்வ வளம் கொழிக்கும். இந்த சுக்கிர பகவானின் சஞ்சரிப்பால் அதிர்ஷ்டம் தரும் ராசிகள் குறித்துக் காண்போம்.

சமீபத்திய புகைப்படம்

2025 முதல் சனி இந்த ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறார்.. இவர்களுக்கு அனைத்து வகையான யோகங்களும் கிடைக்கும்!

Dec 25, 2024 06:45 AM

'வெற்றி நங்கூரமிட காத்திருக்கும் ராசிக்காரர்களா நீங்கள்' இன்று டிச. 25 மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்கள்!

Dec 25, 2024 05:00 AM

குரு பொங்கல் வைத்து பொட்டு வைப்பார்.. சிக்கிக்கொண்ட 3 ராசிகள்.. வக்கிர நிலையில் ராஜ வாழ்க்கை

Dec 24, 2024 05:46 PM

மாடிகளில் கோடிகளை சேர்க்கும் 3 ராசிகள்.. மகிழ்ச்சியில் புண்ணாக்கும் கேது.. இனி நீங்க தான் கெத்து!

Dec 24, 2024 04:40 PM

சனி கட்டிய கோட்டை.. 2025 மகாராஜா வாழ்க்கை பெறுகின்ற 3 ராசிகள்.. இனி உங்களை அசைக்க முடியாது

Dec 24, 2024 04:36 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.25 எதிர்பார்த்தபடி உங்கள் கையில் பணம் சேருமா?

Dec 24, 2024 03:48 PM

மேஷம்: இந்த ராசியினருக்கு மார்ச் மாதத்தில் சுக்கிரப் பெயர்ச்சியால் நன்மைகள் கிடைக்கும். வருவாய் கூடும். தொழிலில் வளர்ச்சி இருக்கும். வெளிநாட்டு நிறுவனத்தால் ஆதாயம் உண்டு.

ரிஷபம்: இந்த ராசியினருக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். புரோமோஷன் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறும். வருவாய் அதிகரிக்கும். உடல்நலம் மேம்படும். அலுவலக அரசியல் நீங்கும்.

மிதுனம்: இந்த ராசியினருக்கு வரும் சுக்கிரப் பெயர்ச்சியால் நல்லதிர்ஷ்டம் உண்டாகும். பதவியில் நற்பெயர் கிட்டும். முன்பே செய்த முதலீடுக்கு தற்போது லாபம் கிட்டும். வெகுநாட்களாக உங்களிடம் பணத்தைப் பெற்று தராமல் இருப்பவர்கள், மனம் திருந்தி வந்து பணத்தைக் கொடுப்பார்கள்.

தனுசு: இந்த ராசியினருக்கு இரண்டு சுக்கிரப் பெயர்ச்சியால், கால் வலி, வயிற்று வலி குணமாகும். தொழிலில் இருந்த சிக்கல்கள் மாறும். போட்டித் தேர்வுகளுக்கு முயற்சித்தால் வெற்றி வாகை சூடலாம்.

கன்னி: இந்த ராசியினருக்கு சுக்கிரனின் இரண்டு சஞ்சாரங்களால், செல்வ வளத்துக்குப் பஞ்சம் இருக்காது. பணி தொடர்பாக வெளிமாநிலம் செல்வீர்கள். அதன்மூலம் ஆதாயம் கிடைக்கும். மந்தமாக இருந்த தொழிலில் லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே அந்நியோன்யம் பெருகும்.

பொறுப்பு துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி