தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: மன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. மகான் கொடுத்த வழி.. அழகாக உதித்தார் பூமிநாதர்

HT Yatra: மன்னனுக்கு ஏற்பட்ட சிக்கல்.. மகான் கொடுத்த வழி.. அழகாக உதித்தார் பூமிநாதர்

Jun 06, 2024, 06:19 PM IST

google News
HT Yatra: பல கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரியாமலே இருந்து வருகிறது. இதுபோல பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல கோயில்கள் இங்கு உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்.
HT Yatra: பல கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரியாமலே இருந்து வருகிறது. இதுபோல பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல கோயில்கள் இங்கு உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்.

HT Yatra: பல கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரியாமலே இருந்து வருகிறது. இதுபோல பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல கோயில்கள் இங்கு உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்.

HT Yatra: உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடவுள்களின் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர். சிவபெருமான் உலகம் முழுவதும் மிகப் பெரிய கோயில் கொண்ட பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். தனக்கென உருவம் இல்லாமல் லிங்கத் திருமேனிகள் காட்சி கொடுத்து வருகிறார். கடவுளுக்கெல்லாம் கடவுளாக விளங்கக்கூடிய சிவபெருமான் உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன் வசம் வைத்திருக்கிறார்.

சமீபத்திய புகைப்படம்

இன்று சனி பகவான் வேகம் மாறும்.. இது மூன்று ராசிக்கு சோகம் தான்.. மோசமான விளைவு காத்திருக்கிறது.. கவனம்!

Nov 15, 2024 07:06 AM

அடாவடி அசுர யோகம் தரும் கேது.. 2025 பணம் கொட்டும்.. பணத்தில் விளையாடும் ராசிகள்.. உங்க ராசி என்ன?

Nov 15, 2024 07:00 AM

சிரமங்களை அனுபவிக்க போகும் மூன்று ராசிகள்.. கேதுவின் விளைவு உங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்த போகுகிறது!

Nov 15, 2024 06:58 AM

‘காத்திருப்பு வீண் போகாது.. காலம் வாசல் வரும்.. நம்பிக்கை நல்லது’ இன்று நவ.15 மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 15, 2024 04:30 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. சனி குறி வச்சுட்டார்.. உங்களுக்கு நல்லதா.. கெட்டதா!

Nov 14, 2024 07:42 PM

மேஷம்,ரிஷபம், மிதுனம், கடகம்,சிம்மம், கன்னி ராசியினரே சனி பகவான் குறி வச்சுட்டார்.. யாருக்கு சாதகம் யாருக்கு பாதகம்!

Nov 14, 2024 07:32 PM

குறிப்பாக இந்தியாவில் திரும்பும் திசை எல்லாம் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. தனித்துவமான பக்தர்கள் கூட்டத்தை கொண்டிருக்க கூடியவர் சிவபெருமான். மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை மிக முக்கிய கடவுளாக சிவபெருமான் திகழ்ந்து வருகின்றார்.

குறிப்பாக தமிழ்நாட்டில் காலடி எடுத்து வைக்கும் அனைத்து இடங்களிலும் சிவபெருமானுக்கு கோயில்கள் எழுப்பப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றது. நாட்டுக்காக போராடினாலும் மன்னர்கள் சிவபெருமானின் பக்தர்களாக இருந்து வந்துள்ளனர். அதற்கு எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டில் எத்தனையோ கோயில்கள் உள்ளன.

தங்களது கலை திறனின் வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் தங்கள் சிவபெருமானின் மிகப்பெரிய பக்தர்களை என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு விதமான கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். 

பல கோயில்கள் மன்னர்களால் கட்டப்பட்டிருந்தாலும் இன்றுவரை சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது தெரியாமலே இருந்து வருகிறது. இதுபோல பல்வேறு சிறப்புகளைக் கொண்டு பல கோயில்கள் இங்கு உள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருச்சி மாவட்டத்தில் உள்ள அருள்மிகு பூமிநாதர் திருக்கோயில்.

தல சிறப்பு

பூமிநாதராக விளங்கக்கூடிய இந்த சிவபெருமானை வழிபட்டால் வீடு கட்டிடம் பூமி தொடர்பான சிக்கல்கள் அனைத்தும் விலகும் என பக்தர்கள் கூறுகின்றன. வாஸ்து திருநாளில் இந்த கோயிலில் யாகம் நடத்தப்படும்.

அன்றைய தினத்தில் யாகத்தில் கலந்து கொண்டால் அங்கு பயன்படுத்தக்கூடிய ஆறு கலசங்களில் இருக்கும் தீர்த்தம் கொண்டு பூமிநாதருக்கு மகாபிஷேகம் செய்யப்படும். அதேபோல பூமிநாதருக்கு பூமிக்கு அடியில் விளையக்கூடிய அனைத்து உணவுப் பொருட்களும் அன்னத்தோடு நைவேத்தியம் செய்யப்படும். இது மிகவும் சிறப்பாக அங்கு கொண்டாடப்பட்டு வருகிறது.

பூமிக்கு அடியில் விளையக்கூடிய கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, வேர்கடலை உள்ளிட்டவைகளை சேர்த்து அன்னத்தால் பூமிநாதருக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது.

இந்த திருக்கோயிலில் இருக்கக்கூடிய நடராஜரின் பாதத்திற்கு கீழ் நான்கு கரங்களுடன் நந்தி தேவர் காட்சி கொடுக்கின்றார். மேலும் கையில் மத்தளம் வாசித்தபடி காட்சி கொடுக்கின்றார். அதன் அருகிலேயே காரைக்கால் அம்மையார் காட்சி கொடுத்து வருகிறார். இது எந்த கோயில்களிலும் இல்லாத அரியக் காட்சியாக கூறப்படுகிறது.

தல வரலாறு

ஒருமுறை இந்த பகுதியை ஆண்டு வந்த மன்னன் ஒருவர் நிர்வாக ரீதியாக ஒரு சிக்கலை கண்டுள்ளார். பலதரப்பட்ட முயற்சிகளை மேற்கொண்ட பிறகும் அந்த சிக்கல் தீராமல் இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஆலோசனை பெறலாம் என்று கூறி மன்னர் ஒரு மகானை சந்தித்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட சிக்கல் குறித்து மகானிடம் மன்னர் கூறியுள்ளார். உடனே அந்த மகான் உங்களது அரண்மனை கட்டுமானத்தில் சிக்கல்கள் இருக்கின்ற காரணத்தினால் உங்களுக்கு இப்படி சிக்கல்கள் ஏற்படுகிறது. இது குறித்து நீங்கள் சிவனை வழிபாடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உடனே மன்னர் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். அவருக்கு பூமிநாதர் என பெயர் சூட்டப்பட்டது அதற்குப் பிறகு மன்னனின் சிக்கல் நிவர்த்தி அடைந்தது. அதற்குப் பிறகு அம்பிகைக்கு சன்னதி எழுப்பப்பட்டுள்ளது அவருக்கு ஜெகதாம்பிகை எனும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை