தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: குளத்தில் அமர்ந்த பிள்ளையார்.. விநாயகருக்கு பள்ளி அறை.. அதிசயங்கள் நிறைந்த மணக்குள விநாயகர்

HT Yatra: குளத்தில் அமர்ந்த பிள்ளையார்.. விநாயகருக்கு பள்ளி அறை.. அதிசயங்கள் நிறைந்த மணக்குள விநாயகர்

Mar 24, 2024, 06:29 AM IST

google News
Arulmigu Manakula Vinayagar: மரத்தடியில் தொடங்கி மாபெரும் கோயில்கள் வரை அனைத்து இடங்களிலும் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார். விநாயகரின் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய மணக்குள விநாயகர் திருக்கோயில்.
Arulmigu Manakula Vinayagar: மரத்தடியில் தொடங்கி மாபெரும் கோயில்கள் வரை அனைத்து இடங்களிலும் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார். விநாயகரின் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய மணக்குள விநாயகர் திருக்கோயில்.

Arulmigu Manakula Vinayagar: மரத்தடியில் தொடங்கி மாபெரும் கோயில்கள் வரை அனைத்து இடங்களிலும் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார். விநாயகரின் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய மணக்குள விநாயகர் திருக்கோயில்.

முழுமுதற் கடவுளாக விளங்க கூடியவர் விநாயகர் பெருமான். எந்த கோயில்களுக்குச் சென்றாலும் முதல் கடவுளாக அமர்ந்திருப்பவர் விநாயகர். இவரை வணங்கி விட்டு சென்றால் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சமீபத்திய புகைப்படம்

யாருங்க இந்த பாபா வங்கா.. என்னது 2025 ல் பொன்னாக ஜொலிக்க காத்திருக்கும் 5 ராசிகளை கணித்திருக்கிறாரா!

Dec 22, 2024 10:08 AM

‘செல்வம் தேடி வரும்.. நினைத்தது நடக்கும் யோகம் யாருக்கு பாருங்க’ மேஷம் முதல் மீனம் வரை இன்று எப்படி இருக்கும் பாருங்க

Dec 22, 2024 05:00 AM

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருப்பவர் இவர். இந்தியாவில் இவருக்கென மிகப் பெரிய விசேஷமான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. வட மாநிலங்களில் மட்டுமல்லாது, தென் மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

மரத்தடியில் தொடங்கி மாபெரும் கோயில்கள் வரை அனைத்து இடங்களிலும் அமர்ந்திருந்து பக்தர்களுக்கு விநாயகர் காட்சி கொடுத்து வருகிறார். விநாயகரின் சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றாக விளங்கக் கூடியது புதுச்சேரி மாநிலத்தில் இருக்கக்கூடிய மணக்குள விநாயகர் திருக்கோயில்.

மிகவும் பிரபலமாக இருக்கக்கூடிய கோயில்களில் இதுவும் ஒன்று. ஜனவரி ஒன்றாம் தேதி அன்று இந்த திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடுவார்கள். ஆவணி மாதத்தில் இந்த கோயிலில் திருவிழா கொண்டாடப்படுகிறது அப்போது ஏராளமான பக்தர்கள் அங்கு கலந்து கொள்வார்கள்.

தலத்தின் சிறப்பு

 

விநாயகர் இருக்கக் கூடிய எந்த கோயில்களிலும் இல்லாத அளவிற்கு இந்த கோயிலில் பள்ளி வரை உள்ளது. இந்தப் பள்ளி அறையில் விநாயகர் ரோடு இருக்கக்கூடியவர் அவருடைய தாயார் பார்வதி தேவி. இங்கு இருக்கக்கூடிய விநாயகர் கிணற்றின் மீது அமர்ந்திருக்கிறார். மூலவராக இருக்கக்கூடிய மணக்குள விநாயகர் இருக்கும் இடம் அமைந்திருப்பது கிணறு அல்லது குலம் என கூறப்படுகிறது. இது பலரும் அறியாத செய்தியாகும்.

மூலவருக்கு மிக அருகில் ஒரு ஆழமான குழி இருக்கும் அதில் தான் தீர்த்தம் இருக்கின்றது. இன்று வரை அதன் ஆழத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஆரம்ப காலத்தில் குளமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோயிலில் வீற்றிருக்கக் கூடிய விநாயகரை பாரதியார் அன்னை அரவிந்தர் உள்ளிட்டோர் அனைவரும் வணங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் தினந்தோறும் இந்த கோயிலில் அன்னதானம் செய்யப்படுகிறது. பக்தர்களுக்கு மூன்று வேலையும் பிரசாதம் கொடுக்கப்படுகிறது.

சிதம்பரத்தில் இருக்கக்கூடிய நடராஜரை போலவே இந்த திருக்கோயிலில் நர்த்தன காலத்தில் காட்சி கொடுக்கின்ற விநாயகர் விக்ரகம் அமைந்துள்ளது.

வெளிநாட்டு பக்தர்கள் ஏராளமான உதவிகளை இந்த கோயிலுக்கு நேர்த்திக்கடனாக செய்துள்ளனர். இந்த இந்தியாவிலேயே விநாயகர் கோயில்களில் கோபுரம் முழுக்க தங்கத்தால் வேயப்பட்ட கோயிலாக இந்த மணக்குள விநாயகர் கோயில் விளங்கி வருகிறது. அப்படிப்பட்ட தனிச்சிறப்பை இந்த திருக்கோயில் கொண்டுள்ளது.

தல வரலாறு

 

கிபி 1688 ஆம் ஆண்டு பிரெஞ்சுக்காரர்கள் கோட்டை ஒன்றை கட்டியுள்ளனர். இந்த கோட்டைக்கு பின்புறமாக அமைந்திருந்த கோயில்தான் மணக்குள விநாயகர் திருக்கோயில். இந்த திருத்தலம் இருந்த இடத்தில் குலம் இருந்ததாகவும். அருகே கடற்கரை இருந்ததால் இந்த பகுதி முழுவதும் மணல் இருந்த காரணத்தினால் இது மணல் குளம் என அழைக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியானது புதுச்சேரியில் கிடைக்கப்பெற்ற வரலாற்றுச் சான்றுகள் மூலம் அறியப்பட்டுள்ளது. இந்த மணல் குளத்தின் கீழ்கரையில் விநாயகர் ஆலயம் எழுப்பப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இவர் மணற்குள விநாயகர் என அழைக்கப்பட்டுள்ளார்.

அமைவிடம்

 

இந்த திருக்கோயில் புதுச்சேரியில் அமைந்துள்ளது. இங்கே தங்குமிடம் வாகன வசதிகள், உணவு விடுதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி