HT Yatra: தர்மம் கேட்டு வந்த சிவனடியார்.. இடம் தெரியாமல் தவித்த மன்னன்.. கோயிலை கட்ட இடம் காட்டிய சிவபெருமான்
May 06, 2024, 06:00 AM IST
Dharmeswarar Temple: பல்வேறு விதமான வரலாறுகளைக் கொண்டு சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில்.
பல்வேறு வரலாறுகளைக் கொண்டு எத்தனையோ திருக்கோயில்கள் இந்த இந்திய திருநாட்டில் இருந்து வருகிறது. மொத்த உலகத்திலும் கோயில்கள் அதிகம் கொண்ட நாடாக இந்திய நாடு விளங்கி வருகின்றது. மிகப்பெரிய மத சிந்தனைகளை கொண்ட நாடாக இந்தியா விளங்கி வருகின்றது
சமீபத்திய புகைப்படம்
உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது. மனிதர்கள் உருவான காலத்தில் இருந்து வரலாறு தெரியாத எத்தனையோ சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை கண்ணுக்கு இனிமையாக இருந்து வருகின்றன.
எதிர்களாக சண்டை போட்டு வந்த அனைத்து மன்னர்களுக்கும் குலதெய்வமாக சிவபெருமான் இருந்து வந்துள்ளார். எந்த உருவமும் இல்லாமல் லிங்கத் திருமேனியாக இன்று வரை பல கோயில்களில் சிவபெருமான் காட்சி அளித்து வருகிறார்.
பல்வேறு விதமான வரலாறுகளைக் கொண்டு சிறப்பு மிகுந்த கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகின்றன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் அருள்மிகு தர்மேஸ்வரர் திருக்கோயில்.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமான் தர்மேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். வேதாம்பிகை ஆக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார் இந்த கோயிலின் தல விருட்சமாக சரக்கொன்றை விளங்கி வருகிறது தீர்த்தம் சிவ புஷ்கரணி ஆகும்.
தல பெருமை
வேதநாயகியாக வீழ்ச்சி இருக்கக்கூடிய தாயார் வேதங்களின் தலைவியாக அழைக்கப்படுகிறார். இவர் தனி சன்னதிகள் சதுர பீடத்தில் நின்றபடி பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார். அதன் காரணமாகவே இவர் வேதநாயகி என அழைக்கப்படுகிறார். குறிப்பாக பௌர்ணமி தினத்தன்று சந்தன காப்பு அலங்காரத்தில் வேதநாயகி காட்சி கொடுத்து வருகிறார். இதில் மேலும் சிறப்பு என்னவென்றால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி தினத்தன்று நிறைவணிக் காட்சி வைபவம் நடைபெறுகிறது.
அன்றைய தினம் தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் மலர்கள் உள்ளிட்டவற்றை சன்னதி முன் மண்டபத்தில் வைத்து கட்டி அலங்காரம் செய்யப்படுவது மேலும் சிறப்பாகும்.
இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய சதுர்வேத விநாயகர் மிகவும் அரிதான விநாயகர் கூறப்படுகிறார். குறிப்பிட்ட ஒரு சில சிவன் கோயில்கள் மட்டும் இந்த சதுர் வேத. விநாயகர் இருப்பார் என கூறப்படுகிறது. இந்த ஊரில் ஒரே சன்னதியில் அமர்ந்து வரிசையாக இருக்கக்கூடிய நான்கு விநாயகர் பெருமான்களையும் தரிசிக்கலாம் என கூறப்படுகிறது.
நான்கு வேதங்களாக கருதப்படும் ரிக், யஜுர், சாம, அதர்வண இந்த நான்கு வேதங்களும் இங்கு இருக்கக்கூடிய விநாயகரை வழிபட்டதாக கூறப்படுகிறது.
தல வரலாறு
இந்த பகுதியை முற்காலத்தில் ஆண்டு வந்த பல்லவ மன்னன் ஒருவர் மிகப்பெரிய சிவபக்தனாக இருந்து வந்துள்ளார். மக்களுக்கு உதவி மற்றும் தான தர்மங்கள் செய்வதில் சிறந்து விளங்கி வந்துள்ளார். இவருக்கு நீண்டகாலமாக ஒரு சிவன் கோயில் எழுப்ப வேண்டும் என ஆசை இருந்து வந்துள்ளது. ஆனால் இந்த இடத்தில் அந்த கோயிலை கட்டுவது என தெரியாமல் தவித்து வந்துள்ளார்.
ஒரு சமயம் சிவனடியார் ஒருவர் மன்னனிடம் வந்து நான் பரம ஏழையாக வாழ்ந்து வருகிறேன். எனக்கு ஏதாவது தர்மம் கொடுங்கள் என வேண்டி கேட்டுள்ளார். மன்னர் அவருக்கு உதவி செய்ய முயற்சி செய்யும்பொழுது திடீரென அருகில் இருந்த ஒரு இடத்தை சுட்டிக்காட்டி இந்த இடத்தில் சிவன் கோயிலை கட்டும்படி கூறியுள்ளார்.
மன்னனின் எண்ணத்தை சிவனடியார் எப்படி அறிந்தார் என ஆச்சரியத்தில் மன்னன் ஆழ்ந்துள்ளார். உடனே சிவனடியார் தனது சுய ரூபத்தைக் காட்டி சிவனாக மாறினார். பரம பக்தனாக விளங்கிய பல்லவ மன்னனுக்கு காட்சி கொடுத்துவிட்டு அங்கிருந்து மறைந்தார். சிவபெருமான் கூறியபடி சுட்டிக்காட்டியை இடத்தில் கோவில் எழுப்பி தர்மம் கேட்டு வந்த சிவபெருமானுக்கு தர்மேஸ்வரர் என பெயர் சூட்டி பல்லவ மன்னன் வழிபட்டு வந்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9