HT Yatra: தோஷத்தில் விழுந்த ராமர்.. சிவலிங்கம் உருவாக்கிய ராமர்.. காஞ்சிபுரம் வர சொன்ன சிவபெருமான்
May 09, 2024, 06:31 PM IST
Kanchipuram: காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதர் திருக்கோயில்.
உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை வைத்திருக்கக் கூடியவர் சிவபெருமான் தனக்கென உருவம் இல்லாமல் இந்த திருமேனியில் உலகமெங்கும் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறார்.
சமீபத்திய புகைப்படம்
குறிப்பாக இந்தியாவில் சிவபெருமானுக்கு திரும்பும் இடமெல்லாம் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டு வருகிறது. உயிரினங்கள் தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரை வெகுஜன மக்களால் போற்றப்படும் இறைவனாக சிவபெருமான் திகழ்ந்து வருகிறார்.
மன்னர்கள் காலத்திலிருந்து இன்று வரை சிவபெருமான் குலதெய்வமாக திகழ்ந்து வருகின்றார். சிவபெருமானின் பரம பக்தனாக எத்தனையோ மன்னர்கள் இருந்து வந்துள்ளனர். காலத்தால் அழிக்க முடியாத எத்தனையோ கோயில்களை மன்னர்கள் கட்டியுள்ளனர். அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதர் திருக்கோயில்.
தல பெருமை
தமிழ்நாட்டின் வடக்கு ராமேஸ்வரமாக திகழ்ந்து வருகிறது இந்த ராமநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்கக்கூடிய வல்லப கணபதி கல்வி கணபதி ஆக விளங்கி வருகின்றார். சிவபெருமான் திரிபுரசம்ஹாரத்தின் போது விநாயகரை வழிபடாமல் தேரில் புறப்பட்டுச் சென்றார் இதனை கண்ட விநாயக பெருமான் தேரின் அச்சினை முறித்து சிவபெருமான் சென்றதை தடுத்து நிறுத்தினார் அதற்குப் பிறகு சிவபெருமான் தனது தவறை உணர்ந்து விநாயக பெருமானை வழிபட்டார் அந்த சம்பவம் நிகழ்ந்தது இந்த திருத்தளத்தில் தான் என கூறப்படுகிறது.
வேலையில்லாதவர்களுக்கு மற்றும் பதவி இழந்தவர்களுக்கு பாக்கியம் தரும் விநாயகராக இந்த வல்லப கணபதி திகழ்ந்து வருகிறார்.
இந்த தலத்திற்கு பல முறை காஞ்சி பெரியவர் வருகை புரிந்துள்ளார். சிதலமடைந்து பல இடங்கள் இந்த கோயிலில் காணப்பட்டுள்ளது. காஞ்சி பெரியவர் ஆசியின் படி இந்தக் கோயில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த திருக்கோயில் காஞ்சி காமகோடி பீடத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
தல வரலாறு
தசரதனின் புத்திரனாக விளங்கும் ராமபிரான் 14 ஆண்டுகள் வனவாசம் சென்றார். அப்போது அவரது மனைவியான சீட்டை இராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்திருந்தார். ஆஞ்சநேயர் உதவியோடு வானரப் படைகளோடு சென்று ராமபிரான் ராவணனை வதம் செய்து சீதையை மீட்டெடுத்தார். சிவபெருமானின் மிகப்பெரிய பக்தனாக விளங்கிய ராவணனை கொன்றதால் ராமருக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.
அந்த தோஷத்தை நிவர்த்தி செய்வதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் ஸ்தாபித்து ராமபிரான் பூஜை செய்தார். அப்போது ராமபிரானுக்கு சிவபெருமான் காட்சி அளித்து மோட்ச புரிகளில் ஒன்றாக விளங்கிவரும் காஞ்சிபுரத்திற்குச் சென்று தன்னை வழிபாடு செய்யும்படி அறிவுறுத்தியுள்ளார். அதன் படி காஞ்சிபுரத்திற்குச் சென்று ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட தளம் தான் இந்த ராமநாதர் தலம்.
ராமர் வந்து வழிபட்டதால் இங்கு வீற்றிருக்கக் கூடிய சுவாமி ராமநாதர் என அழைக்கப்படுகிறார். ராமபிரான் வழிபட்டது மட்டுமல்லாமல் இங்கு வீற்றிருக்க கூடிய ராமநாதரை தேவர்கள் மிருகங்கள் பறவைகள் என மூன்று லோகத்தினரும் வழிபாட்டு முக்தி பெற்றதாக புராணத்தில் கூறப்படுகிறது. இந்த தலத்தில் வந்து வழிபட்டால் ராமேஸ்வரத்தில் பெற்ற புனிதம் மற்றும் பெருமை முழுமையாக கிடைக்கும் என கூறப்படுகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்