பெரிதாக ஆசைப்பட்ட மூதாட்டி.. கோயில் கட்டிக்கொடுத்த மன்னர்.. காட்சி கொடுத்த கல்பாத்தி விஸ்வநாதர்
Oct 26, 2024, 06:00 AM IST
Viswanatha Swamy: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்க இருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வநாதன் எனவும் தாயார் விசாலாட்சி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Viswanatha Swamy: இந்தியாவில் எங்கு திரும்பினாலும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தன்வசம் வைத்திருக்க கூடியவர் சிவபெருமான்.
சமீபத்திய புகைப்படம்
குறிப்பாக இந்தியாவில் தென்னகத்தை ஆண்டு வந்த மன்னர்கள் சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டு சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். மண்ணுக்காக ஒருபுறம் மன்னர்கள் போரிட்டு வந்தாலும் தங்கள் பக்தி மற்றும் கலைநயத்தை வெளிப்படுத்துவதற்காகவே மிகப்பெரிய பிரம்மாண்ட கோயில்களை கட்டி வைத்து சென்றுள்ளனர்.
இன்று வரை அந்த கோயில்கள் காலத்தால் அளிக்க முடியாத சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றன. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் சிவபெருமான் மீது அப்போது இருந்த மக்கள் கொண்டிருந்த பக்தியை தற்போது வெளிப்படுத்துகிறது.
சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்று வரை கண்டுபிடிக்க முடியவில்லை. தற்போது உயர்ந்து நிற்கும் தொழில்நுட்ப வளர்ச்சியோடு ஒப்பிடுகையில் அந்த காலத்தில் மன்னர்கள் கட்டிய கோயில்கள் தற்போது இருப்பதை விட தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்து வருகிறது.
சில கோயில்களின் கட்டுமானங்களை கண்டு தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரமாண்ட கோயில்களை மன்னர்கள் கட்டிச்சென்றுள்ளனர். அதற்குச் சான்றாக எத்தனையோ கோயில்கள் நமது தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டம் கல்பாத்தி அருள்மிகு விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயிலில் வீற்றிருக்க இருக்கக்கூடிய சிவபெருமான் விஸ்வநாதன் எனவும் தாயார் விசாலாட்சி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
கேரளா மாநிலத்தில் உள்ள சிவபெருமான் கோயில்களில் இந்த கோயிலில் மட்டுமே நடராஜருக்கு கனக சபை அமைக்கப்பட்டுள்ளது. இந்த திருக்கோயிலில் நவகிரகங்கள் தங்களது துணையோடு காட்சி கொடுத்த வருகின்றன. ஐப்பசி மாதத்தில் இந்த கோயிலில் எடுக்கப்படும் கல்பாத்தி தேர் திருவிழா மிகவும் சிறப்பு பெற்ற திருவிழாவாகும்.
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய காசி விஸ்வநாதர் கிழக்கு நோக்கி காட்சி கொடுத்து வருகிறார். தாயார் விசாலாட்சி தெற்கு நோக்கி அருள் பாலித்து வருகிறார். இந்த கோயிலில் வந்து வழிபட்டால் உயிர் பயம், திருமண தடை, குழந்தையின்மை உள்ளிட்டவைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த திருக்கோயிலில் கல்பாத்தி தேர் திருவிழா ஐப்பசி மாதம் ஒன்பது நாட்கள் நடத்தப்படுகிறது. அதேபோல மயிலாடுதுறை மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் தெரு திருவிழா நடத்தப்படுகிறது.
தல புராணம்
பாலக்காட்டில் இருக்கக்கூடிய இந்த கல்பாத்தி புழைக்கரையில் லட்சுமி அம்மாள் என்று முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்தார். வயது முதிர்ந்த இந்த மூதாட்டியின் குடும்பத்தினர் மயிலாடுதுறையில் வசித்து வந்தனர். மயிலாடுதுறையில் இருக்கக்கூடிய மயூரநாதர் சுவாமி கோயில் போலவே கல்பாத்தி புழையிலும் கோயில் அமைக்க வேண்டும் என அந்த மூதாட்டி ஆசைப்பட்டுள்ளார்.
இதனால் அந்த மூதாட்டி காசிக்குச் சென்று பானலிங்கம் ஒன்று பூஜை செய்து ஆனி மாதத்தில் வரக்கூடிய அமாவாசை தினத்தன்று எடுத்து வந்துள்ளார். கல்பாத்தியில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.
அப்போதும் அந்த பாலக்காடு பகுதியில் ஆட்சி செய்து வந்த இட்டிக்கொம்பி மன்னர் என்பவர் மூதாட்டியின் கோரிக்கையை ஏற்று அங்கு கோயில் கட்டி கொடுத்துள்ளார். அதன் பின்னர் 1425 ஆம் ஆண்டு விசாலாட்சி தாயாரை வைத்து பிரதிஷ்டை செய்துள்ளனர். கோயிலும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் கோயிலில் இருக்கக்கூடிய சுவாமியை விஸ்வநாதர் எனவும் தாயாரை விசாலாட்சி என்ற திருநாமத்தோடு வழிபட்டு வந்துள்ளனர்.