HT Yatra: வரம் பெற்ற ராமபிரான்.. பாவங்கள் நீங்கிய நவ கன்னியர்கள்.. அமர்ந்த காசி விஸ்வநாதர்
Kasi Viswanathar: பழமை வாய்ந்த எத்தனையோ கோயில்கள் இங்கு உள்ளன. அந்த வகையில் இருக்கக்கூடிய சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயில் மகாமக குளம் கரையில் அமைந்துள்ளது.
Kasi Viswanathar: அனைத்து கடவுளுக்கும் கடவுளாக திகழ்ந்து வரக்கூடியவர் சிவபெருமான். இந்த உலகத்தில் உள்ள உயிரினங்கள் மட்டுமல்லாது மொத்த பிரபஞ்சத்திற்கும் கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். தனக்கென உருவம் இல்லாமல் இந்த ரூபத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார்.
மன்னர்கள் காலம் தொடங்கி இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் கூட்டம் குறைந்தபாடு கிடையாது. உலகமெங்கும் கோயில் கொண்டு பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக இந்தியாவில் திரும்பவும் திசையெல்லாம் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவின் தெற்கு பகுதிகள் சிவபெருமானின் ஆட்சி கொண்ட தென்னாடுடைய சிவனாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகிறார் சிவபெருமான். நாட்டுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அவர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
குறிப்பாக கலைநயத்தில் உச்ச திருட்டு திகழ்ந்து வந்த சோழர்களின் நாயகனாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார். ராஜனுக்கெல்லாம் ராஜனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோயில் அதற்குச் சான்றாகும். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து தஞ்சை பெருவுடையார் கோயில் இன்று வரை கம்பீரமாக நின்று வருகிறது.
எத்தனையோ வரலாறுகளை சுமந்து திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில கோயில்கள் எந்த காலத்தில் கட்டப்பட்டது என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு பழமை வாய்ந்த எத்தனையோ கோயில்கள் இங்கு உள்ளன.
அந்த வகையில் இருக்கக்கூடிய சிறப்புமிக்க கோயில்களில் ஒன்றுதான் கும்பகோணம் அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில். இந்த திருக்கோயில் மகாமக குளம் கரையில் அமைந்துள்ளது.
தல சிறப்பு
காசி விசுவநாதராக இருக்கக்கூடிய சிவபெருமான் விசாலாட்சி தாயாரோடு இங்கு காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயிலில் சண்டிகேஸ்வரரின் எதிராக துர்க்கை அம்மன் அமைந்திருப்பது மிகவும் சிறப்பாக கூறப்படுகிறது.
இந்த திருக்கோயிலில் வயது கடந்தும் பெண்கள் ருதுவாகாமல் இருப்பார்கள். எந்த மருத்துவமும் செயல்படாமல் போகும். அப்படிப்பட்ட சிக்கலை தீர்க்கும் கோயிலாக அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் விளங்கி வருகிறது. இங்கு இருக்கக்கூடிய நவ கண்ணியர்களை வழிபட்டால் இந்த சிக்கல்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்த வருகிறது.
வழிபாடு
இந்த கோயிலில் இருக்கக்கூடிய நவ கன்னியரை 12 வெள்ளிக்கிழமைகள் விரதமிருந்து தொடர்ந்து வழிபட்டு வந்தால் வயதாகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலும் இந்த கோயிலில் வழிபாடு செய்தால் சகல சங்கடங்கள், திருமண தடை, குழந்தை இன்மை உள்ளிட்ட இன்னல்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பொதுவாக வேப்ப மரத்தின் அடியில் அம்பிகை அல்லது விநாயகர் சிலைகள் மட்டுமே அமைக்கப்பட்டு இருக்கும் ஆனால் இந்த கோயிலில் மிகப்பெரிய சிவலிங்கம் ஒன்று உள்ளது. இது அதிக உயரம் கொண்ட லிங்கமாக காட்சி கொடுத்து வருகிறது. நவ கன்னியர்களின் பாவங்களை போக்குவதற்காக காசியில் இருந்து இறைவன் இங்கு வந்து குடி கொண்ட காரணத்தினால் இவர் காசி விஸ்வநாதர் என பெயர் பெற்றார்.
தல வரலாறு
ராமபிரான் தனது மனைவியை பிரிந்து துன்பப்பட்டு வந்தார். தனது மனைவி சீதாவை கவர்ந்து சென்ற ராவணனை கொள்வதற்காக இலங்கை நோக்கி பயணம் மேற்கொண்டார் ராமபிரான். இதன் காரணமாக தனது இயல்பான குணத்தை மாற்றிக்கொண்டு ருத்ராம்சம் பெற வேண்டும் என்பதற்காக அகத்திய மாமுனிவரை வேண்டி உள்ளார்.
அதற்குப் பிறகு கும்பகோணத்தில் இருக்கக்கூடிய காசி விஸ்வநாதரை சில நாட்கள் தங்கி இருந்து தங்கள் வழிபட்டால் உங்களுக்கு ருத்ராம்சம் கிடைக்கும் என ராமபிரானிடம் அகத்தியர் கூறியுள்ளார். இங்கு வந்து ராமபிரான் வழிபட்டு வேண்டுதலை பெற்றார் என புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
கங்கா, யமுனா, நர்மதா, சரஸ்வதி, கோதாவரி, காவேரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவ கன்னியர்கள் தங்களிடம் மக்கள் பாவங்களை தொலைத்துச் சென்ற காரணத்தினால் அவர்களின் பாவங்களின் சுமை அதிகரித்து உள்ளன. இதனால் தங்களது பாவங்களை போக்கிக் கொள்வதற்காக சிவபெருமானை நோக்கி வழிபாடு செய்துள்ளனர்.
மகாமக தினத்தன்று கும்பகோணத்தில் சென்று தாங்கள் நீராடினால் உங்களுடைய பாவம் நீங்கும் என நவ கன்னியர்களுக்கு சிவபெருமான் கூறியுள்ளார். அப்படியே நவ கன்னியர்களும் மகாமக குளத்தில் நீராடி சிவபெருமானை வேண்டி தாங்கள் காசி விஸ்வநாதர் ஆக இங்கே அமர வேண்டுமென வேண்டி உள்ளனர். அதன் காரணமாக சிவபெருமான் இந்த திருக்கோயிலில் காசி விஸ்வநாதராக அமர்ந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்