சுகப்பிரசவம் தரும் பெரியநாயகி.. தோஷம் போக்கிய சசிவர்ணேஸ்வரர்.. அமர்ந்த கோலத்தில் துர்க்கை அம்மன்
Nov 17, 2024, 06:21 AM IST
Sasi Varneswarar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் சசிவர்ணேஸ்வரர் எனவும் தாயார் பெரியநாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
Sasi Varneswarar: உலகிலேயே அதிக கோயில்கள் கொண்ட கடவுளாக சிவபெருமான் விளங்கி வருகின்றார். திரும்பவும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வழிபாடு முறைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டது கிடையாது மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன.
சமீபத்திய புகைப்படம்
அதன்பின்னர் ஆதிக்கடவுளாக திகழ்ந்து வந்த சிவபெருமான் மனிதர்களின் மூலக்கடவுளாக மாறி குலதெய்வமாக திகழ்ந்து வந்தார். மண்ணுக்காக மன்னர்கள் பல போர்களை செய்து பல எல்லைகளைக் கடந்து நாட்டை பிடித்துக் கொண்டனர். ஆனால் அனைத்து மன்னர்களின் குலதெய்வமாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.
இன்றும் பல கடல்கள் கடந்து இருக்கக்கூடிய நாடுகளில் சிவபெருமானுக்கு கோயில்கள் இருப்பது மன்னர்களால் தான். அந்த அளவிற்கு சிவபெருமான் மீது மிகப்பெரிய பக்தியை மன்னர்கள் வைத்துள்ளனர்.
உலகம் முழுவதும் பிரம்மாண்ட கோயில்கள் வானுயர்ந்து காணப்படுவதற்கு காரணம் மன்னர்கள் அவர் மீது வைத்திருந்த அதீத பக்தி தான் காரணம். பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை அசைக்க முடியாமல் அந்த இடத்திலேயே நின்று வருகின்றன.
சோழ சாம்ராஜ்யத்தின் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் திருக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. அதன் ஆதி கடவுளாக சிவபெருமான் உள்ளே லிங்க வடிவில் காட்சி கொடுத்த வருகிறார்.
அதுமட்டும் அல்லாமல் திரும்பும் திசையெல்லாம் தமிழ்நாட்டில் சிவபெருமானுக்கு கோயில்கள் காணப்படுகின்றன. அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் அருள்மிகு சசிவர்ணேஸ்வரர் திருக்கோயில். இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய மூலவர் சசிவர்ணேஸ்வரர் எனவும் தாயார் பெரியநாயகி என்று திருநாமத்தோடு அழைக்கப்பட்டு வருகின்றனர்.
தல சிறப்பு
இந்த கோயிலில் வீற்றிருக்கக்கூடிய பெரியநாயகி தாயார் மிகவும் பிரசித்தி பெற்றவராக விளங்கி வருகின்றார். பௌர்ணமி தினத்தன்று இவருக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருக்கோயிலில் மருந்து குடிப்பு என்னும் சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது.
பெரியநாயகி தாயாருக்கு பாலால் அபிஷேகம் செய்து அந்த பால் பிரசாதமாக கொடுக்கப்படுகிறது. கர்ப்பமாக இருக்கக்கூடிய பெண்கள் அதனை பிரசாதமாக வாங்கி மருந்து போல் அருந்துகின்றனர். இதை குடித்தால் பெண்களுக்கு சுகப்பிரசவம் உண்டாகும் என்ற நம்பிக்கை இருந்து வருகிறது.
பிறந்த குழந்தைகள் அழுவது சகஜம்தான். ஆனால் சில குழந்தைகள் தொடர்ந்து அழுது கொண்டே இருக்கும். அந்த குழந்தைகளின் நலனுக்காக பெரியநாயகி தாயாரிடம் வணங்கிக் கொண்டால் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
குழந்தைகளின் பெற்றோர் பெரியநாயகி தாயாருக்கு அபிஷேகம் செய்துவிட்டு அந்த நீரை குழந்தைகள் மீது தெளித்து அல்லது குளிப்பாட்டி விட்டால் அந்த குழந்தைகளுக்கு சிக்கல்கள் தீரும் என்பது பக்தர்களை நம்பிக்கையாக இருந்து வருகிறது.
இந்த கோயிலில் இருக்கக்கூடிய துர்க்கை அம்மன் மிகவும் விசேஷமாக கருதப்படுகிறார். பொதுவாக சிவபெருமான் கோயில்களில் சுற்றுச்சூழலில் வடக்கு திசையை நோக்கி துர்க்கை அம்மன் காட்சி கொடுப்பார். ஆனால் இந்த கோயிலில் தெற்கு புறம் நோக்கி தனிச் சன்னதியில் இரண்டு கைகளோடு காலை மடக்கி அமர்ந்தபடி காட்சி கொடுத்து வருகிறார். இந்த துர்க்கை அம்மன் வழிபட்டால் திருமணத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
தல வரலாறு
சந்திர பகவானுக்கு தோஷம் ஏற்பட்டுள்ளது. சிவபெருமானுக்கு பூஜை செய்து வழிபட்டால் தோஷம் நீங்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக சந்திர பகவான் இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானுக்கு சிவ பூஜை செய்து வழிபாடு நடத்தியுள்ளார். அதன் பின்னர் அவருக்கு தோஷம் நிவர்த்தி அடைந்துள்ளது.
அதன் காரணமாக இங்கு வீற்றிருக்கக்கூடிய சிவபெருமானுக்கு சந்திரசேகரன் என்ற திருநாமம் வழங்கப்பட்டுள்ளது. அதற்குப் பிறகு இந்த பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் சிவபெருமானுக்கு கோயில் எழுப்பி அவருக்கு சசிவர்ணேஸ்வரர் என்ற திருநாமத்தை சூட்டியுள்ளார்.