’தலைமை பதவி உங்களை தேடி வருமா? எந்த ராசிக்காரர்களுக்கு ஆளுமை அதிகம்!’ 5,7,9,11ஆம் இடங்கள் சொல்லும் சூட்சுமம்!
Dec 04, 2024, 04:30 PM IST
ஒருவர் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் எனில் 5ஆம் இடமும், பொதுச்சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் 7ஆம் இடமும், சமுதாயத்தில் அந்தஸ்து, புகழ், கௌரவம் கிடைக்க வேண்டும் எனில் 9ஆம் இடங்கள் வலுப்பெற்று இருப்பது அவசியம்.
ஆளுமை மற்றும் தலைமை பதவியை விரும்பாத நபர்களே இல்லை என்று சொல்லலாம். ஒருவரது ஜாதகத்தில் லக்னம்தான் தலைமை பொறுப்பை வகிக்கின்றது. உங்கள் லக்னாதிபதி அனுமதி இல்லாமல், தலைமை பொறுப்புக்கு வர முடியாது. தலைமை பொறுப்புக்கு உரிய கிரகமாக சூரிய பகவான் உள்ளார்.
சமீபத்திய புகைப்படம்
தலைமை பொறுப்பும், பாவங்களும்!
ஒருவர் சிறந்த நிர்வாகியாக இருக்க வேண்டும் எனில் 5ஆம் இடமும், பொதுச்சேவையில் சிறந்து விளங்க வேண்டும் என்றால் 7ஆம் இடமும், சமுதாயத்தில் அந்தஸ்து, புகழ், கௌரவம் கிடைக்க வேண்டும் எனில் 9ஆம் இடங்கள் வலுப்பெற்று இருப்பது அவசியம். இந்த அனைத்து அம்சங்களையும் நிறைவாக அனுபவிக்க வேண்டும் எனில் 11ஆம் இடம் வலுவுடன் இருப்பதும் முக்கியம்.
உதாரணமாக மேஷ லக்னத்தை சேர்ந்த ஒருவருக்கு மேஷ லக்னத்தை சேர்ந்த ஒருவருக்கு சூரியன் உச்சம். அதே இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று இருந்தாலோ அல்லது கேந்திரம், உபஜெய ஸ்தானங்களில் பலம்பெற்றாலோ அந்த ஜாதகர் உரிய தசா காலத்தில் தலைமை பதவியை அடைவார்.
லக்னாதிபதியும் பாவிகள் தொடர்பும் கூடாது
தலைமை பதவிக்கு ஒருவர் வர வேண்டும் எனில் லக்னத்தில் பாவிகள் தொடர்பு இருக்க கூடாது. அதே போல், லக்னாதிபதி ஆனவர் நீசம், அஸ்தங்கம், வக்ரம், ராகு அல்லது கேதுக்கள் உடன் சேர்ந்து இருக்க கூடாது.
அதே போல் சூரியன் பகவான் ஆனவர் உங்கள் லக்னத்திற்கோ அல்லது லக்னாதிபதிக்கோ 5, 9 ஆம் இடங்களில் தொடர்பு வந்தால் தலைமை பதவிகள் தேடி வரும். நிறுவனத் தலைவர்கள், நிறுவன மேலாளர்கள், கட்சித் தலைவர்கள், முதலமைச்சர், அமைச்சர், மக்கள் பிரதிநிதி, தர்மகர்த்தா, சங்கத் தலைவர் போன்ற தலைமை பொறுப்புகளை கொடுக்கும். அதே போல் ஒருவரது ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் இருந்தால் எளிதில் தலைமை பொறுப்புகள் தேடி வரும். ராசிகளை பொறுத்தவரை தலைமை பதவி கிடைக்க சிம்மம் மற்றும் மேஷம் ராசிக்காரர்களுக்கு பிரதானமாக இருக்கும். இவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் எனில் சனி மற்றும் குரு ஆகிய கிரகங்கள் வலுப்பெற்று இருப்பது முக்கியம்.
ஒருவர் ஆளுமையுடன் செயல்பட வேண்டும் எனில் செவ்வாய் பகவான் வலுவுடன் இருப்பது அவசியம். செவ்வாய் பலம் பெற்று இருந்தாலே ஆளுமை, வைராக்கியம், போர்க்குணம் ஆகியவை கிடைக்கும். சூரியன், செவ்வாய் சேர்க்கை ஆனது தலைமை பதவிக்கு உகந்த ஜாதகமாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்