Kulaigai Neram: ‘குளிகை நேரம் என்றால் என்ன? குளிகை நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?’
Oct 06, 2024, 04:42 PM IST
Kulaigai Neram: குளிகை நேரத்தில் தொடங்கப்படும் எந்த ஒரு செயலும் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம் ஆகும். இதனால், திருமணம் தவிர மற்ற சுப காரியங்களை செய்யலாம்.
குளிகை நேரம் என்றால் என்ன?
சனி பகவான் மற்றும் ஜோஸ்டா தேவியின் புதல்வனாக குளிகை உள்ளார். குளிகை நேரம் என்பது தமிழ் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்படும் ஒரு குறிப்பிட்ட கால அளவு ஆகும்.
சமீபத்திய புகைப்படம்
ராகு காலம், எமகண்டம் போன்ற நேரங்களை போன்று குளிகை நேரமும் தினசரி காலண்டர்களில் குறிப்பிடப்படுகின்றது. ராகு காலம் மற்றும் எமகண்டம் ஆகியவை துர்கை, சரபேஸ்வரர், பிரத்தியங்கிரா போன்ற தெய்வங்களின் வழிபாடு உடன் தொடர்பு உடையது.
ஏன் குளிகை நேரம் முக்கியம்?
குளிகை நேரத்தில் தொடங்கப்படும் எந்த ஒரு செயலும் திரும்பத் திரும்ப நடைபெறும் என்பது ஐதீகம் ஆகும். இதனால், திருமணம் தவிர மற்ற சுப காரியங்களை செய்யலாம்.
அதிர்ஷ்டம்
குறிப்பாக, தங்கம் வாங்குதல், கடன் அடைத்தல், மளிகை சாமான்களை வாங்குதல், ஆடைகளை போன்ற செயல்களை குளிகை நேரத்தில் செய்தால் அது நன்மை தரும் என்று நம்புகின்றனர்.
குளிகை நேரத்தில் என்ன செய்யலாம், என்ன செய்யக்கூடாது?
செய்யக்கூடியவை:-
- தங்கம் வாங்குதல்
- கடன் வாங்குதல்
- சேமிப்பு
- ஆன்மிக செயல்கள்
செய்யக்கூடாதவை:-
- திருமணம்
- கடன் வாங்க கூடாது
- நகை உள்ளிட்ட பொருட்களை அடகு வைக்க கூடாது.
- ஈமச்சடங்குகளை செய்யக் கூடாது.
- வீடு காலி செய்யக் கூடாது.
- இறந்தவரின் உடலை எடுத்துச் செல்லுதல்
- மருத்துகளை எடுத்துக் கொள்ள தொடங்குதல்
- மருத்துவ சிகிச்சைகளை தொடங்குதல்
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்