விருச்சிகம் ராசிக்கு விலகும் அர்தாஷ்டம சனி! உத்வேகம் பிறக்குது! வளர்ச்சி வருகுது! பிடிக்க ரெடியா?
Nov 05, 2024, 08:23 PM IST
ராகு உடன் சனி சேர்க்கை உண்டாகும் காலத்தில் தவறான நண்பர்களின் பழக்கம் உண்டாகலாம். எனவே புதிய அறிமுகம் நட்புகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலர் போதைக்கு அடிமையாகளாம் என்பதால் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
காலபுருஷனின் 8ஆம் வீடாக உள்ள விருச்சிகம் ராசிக்காரர்கள் ரகசியங்களை காப்பதில் வல்லவர்கள். வாழ்கையில் எவ்வளவு அடிமட்டத்திற்கு சென்றாலும், வைராக்கியத்துடன் செயல்பட்டு முன்னேறும் தன்மை இவர்களுக்கு உண்டு. அன்புக்கு அடிமையாகும் குணம் இவர்களுக்கு உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
சனி பெயர்ச்சி
அர்தாஷ்டம சனியாக உள்ள சனி பகவான், பஞ்சம ஸ்தானம் எனப்படும் மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார். ஏற்கெனவே கடன் பாதிப்பு, உறவுகள் உடன் பிரச்னை, உடல் பாதிப்பு, முயற்சிகள் தோல்வி, திருமணத்தில் சிக்கல், அவமானங்கள் ஆகிய பிரச்னைகள் இருந்து இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் தீரும் காலகட்டம் சனி பெயர்ச்சி மூலம் வருகின்றது. வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி அன்று கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
வளர்ச்சியும் எதிர்ப்புகளும் பிறக்கும் காலம்!
4ஆம் இடத்தில் உள்ள சனி பகவான் 5ஆம் இடத்திற்கு செல்வதால் எதிர்ப்புகள் அதிகம் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை. யார் வளர்ச்சி அடைகிறார்களோ அங்கேதான் எதிர்ப்புகள் இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எவ்வளவு சோதனைகள் வந்தாலும் சாதனை படைப்பீர்கள். வாழ்கையில் மிகப்பெரிய நல்ல திருப்பங்கள் உண்டாகும்.
ராகு உடன் சனி சேர்க்கை உண்டாகும் காலத்தில் தவறான நண்பர்களின் பழக்கம் உண்டாகலாம். எனவே புதிய அறிமுகம் நட்புகளில் மிக கவனமாக இருக்க வேண்டும். சிலர் போதைக்கு அடிமையாகளாம் என்பதால் மிக கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
பணியிடங்களில் சிக்கல்கள் வரலாம்!
7ஆம் இடத்தில் உள்ள குரு பகவான் மூலம் தள்ளி போன திருமணம் நடைபெறும். திருமண தடைகள் விலகும். 11ஆம் வீட்டில் கேது பகவான் உள்ளதால் பணியிடங்களில் சிக்கல்கள் உண்டாகலாம்.
சனி பகவானின் பார்வையும் பலன்களும்!
சனி பகவானின் 3ஆம் பார்வையானது 7ஆம் வீட்டில் விழுகிறது. இதனால் திருமணம் கைக்கூடினாலும் சில தடைகள் வந்து போகலாம்.
7ஆம் பார்வை ஆனது லாப ஸ்தானம் ஆன 11ஆம் வீட்டில் விழுவதால் தொழில் மற்றும் பணியிடங்களில் பிரச்னைகள் வரும்.
2ஆம் இடமான தன ஸ்தானத்தை சனி பகவான் 10ஆம் பார்வையாக பார்ப்பதால் பணம் எவ்வளவு வந்தாலும் செலவுகள் உண்டாகும்.
திருநள்ளாறு மற்றும் பைரவர் வழிபாடு
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறுவில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் உள்ள சனி பகவானை வழிபாடு செய்து, நள தீர்த்தத்தில் குளித்து, நல்லெண்ணை தீபம் ஏற்றினால் நன்மைகள் உண்டாகும்.
ஞாயிற்றுக் கிழமைகளை பைரவருக்கு உணவு அளித்தல், முதியவர்களுக்கு உதவிகளை செய்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் வாழ்கையில் மாற்றம் உண்டாகும்.
பொறுப்புத் துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.