தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்திக்கான பூஜை நேரம் எப்போது? எப்படி சிலை வைத்தால் யோகம் உண்டாகும்! இதோ முழு விவரம்!

Vinayagar Chaturthi: விநாயகர் சதுர்த்திக்கான பூஜை நேரம் எப்போது? எப்படி சிலை வைத்தால் யோகம் உண்டாகும்! இதோ முழு விவரம்!

Kathiravan V HT Tamil

Sep 04, 2024, 04:12 PM IST

google News
Vinayagar Chaturthi: கனேஷ புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, விநாயகப் பெருமான் பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இந்த நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்வது மங்களகரமான யோகங்களை உண்டாக்கும் என்பது நம்பிக்கை.
Vinayagar Chaturthi: கனேஷ புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, விநாயகப் பெருமான் பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இந்த நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்வது மங்களகரமான யோகங்களை உண்டாக்கும் என்பது நம்பிக்கை.

Vinayagar Chaturthi: கனேஷ புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, விநாயகப் பெருமான் பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இந்த நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்வது மங்களகரமான யோகங்களை உண்டாக்கும் என்பது நம்பிக்கை.

சமீபத்திய புகைப்படம்

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

ஆண்டுதோறும் ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் 3 நாட்களும், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களில் 10 நாட்கள் வரையும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றது. 

கனேஷ புராணம் மற்றும் ஸ்கந்த புராணத்தின் படி, விநாயகப் பெருமான் பாத்ரபத மாதத்தின் சுக்ல பக்ஷ சதுர்த்தி திதியில் பிறந்தார் என்பது நம்பிக்கை ஆகும். இந்த நாளில் விநாயக பெருமானை வழிபாடு செய்வது மங்களகரமான யோகங்களை உண்டாக்கும் என்பது நம்பிக்கை. 

விநாயகர் சதுர்த்தில் நாளில், வீடுகளிலும், வீதிகளிலும் விநாயகர் சிலைகளை வைத்து மக்கள் வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும், வழிபாடு செய்வதற்கான நல்ல நேரம் மற்றும் சிலையை நிறுவுவது தொடர்பான சில முக்கிய விஷயங்களை தெரிந்து கொள்வோம். 

விநாயக சதுர்த்தி எப்போது?

ஜோதிடர் பண்டிட் அசுதோஷ் திரிவேதி கூறுகையில்,  வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி மாலை 3.31 மணிக்கு தொடங்கி மறுநாள் அதாவது செப்டம்பர் 7 ஆம் தேதி மாலை 5.37 மணி வரை விநாயகர் சதுர்த்தியை கொண்டாடுவதற்கான சதுர்த்தி திதி உள்ளதாக கூறுகிறார். உதய திதியின்படி, விநாயக சதுர்த்தி விரதம் செப்டம்பர் 7-ஆம் தேதி அனுசரிக்கப்பட்டும் என்பதால் அன்றைய தினம் சிலை நிறுவி வழிபாடு செய்ய உகந்த நேரம் என்கிறார். 

வழிபாட்டுக்கான நேரம்

த்ரிக் பஞ்சாங்கத்தின் படி, பிரம்மா, சர்வார்த்த சித்தி யோகம் மற்றும் இந்திர யோகத்துடன், சித்ரா மற்றும் ஸ்வாதி நட்சத்திரங்களும் விநாயகர் சதுர்த்தி அன்று உள்ளன. இந்து மத நம்பிக்கைகளின்படி, விநாயகப் பெருமான் மதிய வேளையில் பிறந்தார் என்பது ஐதீகம்.

அதனால்தான் விநாயகர் வழிபாட்டிற்கு மதிய நேரம் சிறந்ததாக கருதப்படுகிறது. த்ரிக் பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 7 ஆம் தேதிகாலை 11:03 முதல் மதியம் 01:34 வரை பூஜை உள்ளிட்ட வழிபாடுகளை செய்ய நல்ல நாளாக இருக்கும். 10 நாட்கள் வரை விநாயகர் வழிபாடு செய்யும் வழக்கம் உடையவர்கள் வரும் செப்டம்பர் 17-ம் தேதி அன்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம். 

விநாயகர் சிலையை நிறுவுதல் 

வீட்டில் விநாயகர் சிலையை நிறுவும் போது திசையை மனதில் வைத்து செயல்படுவது மிக முக்கியம் ஆகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, விநாயகர் சிலையை சரியான திசையில், சரியான வழியில் நிறுவுவது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. 

இது குறித்து, ஆச்சார்யா ஷியாம் பாண்டே கூறுகையில், வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் விநாயகர் சிலையை நிறுவ வேண்டும் என்று கூறுகிறார். வடகிழக்கு மூலையில் காலி இடம் இல்லை என்றால், கிழக்கு, மேற்கு அல்லது வடக்கு திசையிலும் சிலையை நிறுவலாம்.

விநாயகர் சதுர்த்தி விழா மகாராஷ்டிராவில் சிறப்பு வாய்ந்தது. விநாயக சதுர்த்தி அன்று, மக்கள் விநாயகப் பெருமானின் சிலையை வெகு விமரிசையாக வீட்டிற்கு எடுத்துச் செல்வார்கள். விநாயகர் சிலையை நிறுவும் வரை விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விநாயகப் பெருமான் முழுச் சடங்குகளுடன் வழிபடப்படுகிறார். பின்னர் அனந்த் சதுர்தசி நாளில், விநாயகரை மக்கள் நீர்நிலைகளில் கரைக்கின்றனர். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி