TV Show: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட் இதோ..!-check out the special programs for vinayakar chaturthi 2024 in zee tv - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tv Show: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட் இதோ..!

TV Show: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட் இதோ..!

Karthikeyan S HT Tamil
Sep 04, 2024 04:53 PM IST

TV Show: சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் ஸ்பெஷல் நிகழ்ச்சி வரை..ஜீ தமிழ் தொலைக்காட்சியில் விநாயகர் சதுர்த்தி அன்று ஒளிபரப்பாக உள்ள சிறப்பு நிகழ்ச்சிகள் பற்றிய அப்டேட்களை இங்கு காணலாம்.

TV Show: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட் இதோ..!
TV Show: தளபதி ரசிகர்களுக்கு காத்திருக்கும் தரமான சம்பவம்.. ஜீ தமிழின் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் ஷோ அப்டேட் இதோ..!

அதேபோல் பண்டிகை தினங்களில் வித்தியாசமான நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை மகிழ்விக்கவும் ஜீ தமிழ் தவறுவதில்லை. அந்த வகையில் இந்த வருட விநாயகர் சதுர்த்தி தினமான செப்டம்பர் 7-ம் தேதி ஜீ தமிழில் சிறப்பு பட்டிமன்றம் முதல் கோட் படத்தின் சிறப்பு நிகழ்ச்சி வரை என பல கொண்டாட்டங்கள் காத்துக் கொண்டிருக்கிறது.

அவை என்னென்ன? அதன் ஒளிபரப்பு நேரம் என்ன என்பது குறித்து முழுமையாக பார்க்கலாம் வாங்க..

காலை 9 மணி முதல் 10:30 மணி வரை கலைமாமணி சுகி சிவம் தலைமையில் பக்தி நெறியை பெரிதும் வளர்ப்பவர்கள் ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற உள்ளது.

அதைத்தொடர்ந்து காலை 10:30 மணி முதல் 1:30 மணி வரை விநாயகர் சதுர்த்தி சங்கமம் என்ற சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. அர்ச்சனா தொகுத்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் சீரியல் குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர்.

அதுமட்டுமின்றி சரிகமப குழுவினர், டான்ஸ் ஜோடி டான்ஸ் போட்டியாளர்கள், உங்களது பேவரைட் பிரபலங்கள் என பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த விநாயகர் சதுர்த்தி சங்கமம் பல ரவுண்டுகளுடன் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என களை கட்ட உள்ளது.

அடுத்ததாக மதியம் 1:30 மணி முதல் கவின் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற “ஸ்டார்” திரைப்படம் உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நமது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் இளன் இயக்கத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதை குறிப்பிடத்தக்கது.

தி கோட் சிறப்பு நிகழ்ச்சி

இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் 7 மணி வரை தளபதி விஜய் நடிப்பில் வெளியாக உள்ள “தி கோட்” படத்தின் சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு, தளபதி விஜய் உடன் இணைந்து நடித்த பிரபலங்கள் என அனைவரும் இந்த நிகழ்ச்சியின் கலந்து கொள்கின்றனர். சூட்டிங் பாட்டில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள், படம் உருவான விதம் பாடல்கள் உருவான விதம் என பலரும் அறிந்திடாத பல சூப்பரான விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ள உள்ளனர்.

'தி கோட்' படத்திற்காக ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் முதல் முறையாகவும், இசை அமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா உடன் இரண்டாவது முறையாகவும் விஜய் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த விநாயர் சதுர்த்தி திருநாளை உங்கள் ஜீ தமிழ் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.