தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  கடலுக்குள் அமைந்திருக்கும் தீர்த்த கிணறு!

கடலுக்குள் அமைந்திருக்கும் தீர்த்த கிணறு!

May 05, 2022, 03:31 PM IST

google News
கடலுக்குள் இருக்கும் வில்லூன்றி தீர்த்தம் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.
கடலுக்குள் இருக்கும் வில்லூன்றி தீர்த்தம் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

கடலுக்குள் இருக்கும் வில்லூன்றி தீர்த்தம் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

கடலுக்குள் அமைந்திருக்கும் தீர்த்த கிணறு

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை.. யாருக்கு சூப்பரான நாள்? நவம்பர் 27ம் தேதி 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!

Nov 26, 2024 09:16 PM

சனி ராகு முடிவெடுத்துவிட்டனர்.. இந்த ராசிகள் நம்ம லிஸ்டிலேயே இல்லையே.. இனி பண மழையா கொட்டுமாம்.. ஆனந்த கண்ணீர் தானாம்..!

Nov 26, 2024 05:15 PM

குரு.. அடடே இந்த ராசிகளா.. இனி பணமழை கொட்டுமாமே.. உச்ச ராசிகள் அணிவகுப்பு.. மகிழ்ச்சி ஊஞ்சலில் ஆடுவது உறுதி!

Nov 26, 2024 05:01 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Nov 26, 2024 03:41 PM

ஜாக்பாட் அடிக்கப்போகுது.. கடகத்தில் நுழைந்த செவ்வாய்.. இந்த ராசிகள் ரெடியா இருங்க!

Nov 26, 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே..நாளை நவ.27 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Nov 26, 2024 03:20 PM

கடலுக்குள் இருக்கும் வில்லூன்றி தீர்த்தம் பாவங்களைப் போக்கும் என்பது ஐதீகமாகக் கூறப்படுகிறது.

தீர்த்தங்கள் என்பது மனிதர்களின் பாவங்களைத் தீர்க்கும் இது நம்பப்படுகிறது. ஒருவர் செல்வச் செழிப்போடு வாழ்வதற்கும், தங்களின் பாவங்களைத் தீர்ப்பதற்கும் தீர்த்த வழிபாடு செய்கின்றனர். 

பொதுவாகத் தீர்த்தங்கள் கோயில்களில் இருக்கும். ஆனால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் தங்கச்சிமடம் என்ற ஊரில் வில்லூன்றி தீர்த்தம் என்று அழைக்கப்படும் தீர்த்தம் ஆனது கடலுக்குள் அமைந்துள்ளது.

ராமேஸ்வரம் கோவிலுக்கான 64 தீர்த்தங்களில் இதுவும் ஒன்று. அங்கு திரியம்பகேஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. ராமேஸ்வரம் சென்று வந்திருந்தால் கட்டாயம் இதுபற்றி தெரிந்திருக்கும்.

வில்லூன்றி தீர்த்த வரலாறு

சீதையைச் சிறைபிடித்துச் சென்றார் ராவணன், அவரிடம் போரிட்டுக் கொன்று தனது மனைவியான சீதாவை ராமன் மீட்டெடுத்தார். பின்னர் அங்கிருந்து சீதாவை அழைத்துக்கொண்டு இந்த பகுதிக்கு வரும் பொழுது சீதாவிற்குத் தாகம் எடுத்துள்ளது. 

அப்போது ராமன் தன் கையிலிருந்த அம்பை, கடலின் ஒரு பக்கத்தில் ஊன்றி வைத்தார். அப்போது அந்த இடத்திலிருந்து நல்ல நீர் பொங்கி வழிந்தது.

பின்னர் சீதா அந்த தண்ணீரைக் குடித்து தனது தாகத்தைத் தீர்த்துக் கொண்டார். அந்தப் புனித காலத்தில் தோன்றிய நீர் ஊற்று தான் இந்த வில்லூன்றி நீரூற்று எனக் கூறப்படுகிறது. 

கரையிலிருந்து கடலுக்குள் சில மீட்டர் தூரத்தில் இந்த தீர்த்த கிணறு அமைந்துள்ளது. கரையிலிருந்து இந்த தீர்த்த கிணறு வரை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்த்தக்கிணறு மிகவும் பிரபலமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், தீர்த்தத்தின் மூலம் அனைத்து பாவங்களும் நீங்கும் எனப் பக்தர்களால் நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி