தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  சமுதாயத்தில் பிரபலமடைய பெரிதும் உதவியாக இருக்கும் வாஸ்து குறிப்புகள்!

சமுதாயத்தில் பிரபலமடைய பெரிதும் உதவியாக இருக்கும் வாஸ்து குறிப்புகள்!

Karthikeyan S HT Tamil

Feb 23, 2022, 02:29 PM IST

google News
சமுதாயத்தில் பிரபலமடைய பெரிதும் உதவியாக இருக்கும் வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்.
சமுதாயத்தில் பிரபலமடைய பெரிதும் உதவியாக இருக்கும் வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

சமுதாயத்தில் பிரபலமடைய பெரிதும் உதவியாக இருக்கும் வாஸ்து குறிப்புகள் பற்றி பார்ப்போம்.

பரந்த உலகத்தில் நல்லதும் கெட்டதும் நடந்தே தீரும். ஒரு தெளிவான திட்டத்துடன் நம்முடைய வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். சமுதாயத்தில் எப்போதும் பிரச்சனையாக இருக்கிறதா? கவலை வேண்டாம். ஒருவா் சமூதாயத்தில் புகழ்பெறுவது என்பது சாதாரணமான விஷயம் கிடையாது. தனக்கான ஒரு அடையாளத்தை உருவாக்க ஒவ்வொரு வரும் கடும் முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், வாஸ்து சாஸ்திரம் மூலம் பிரபலமடைய சில எளிய வழிமுறைகள் இருக்கின்றன. இதனை செய்வதன் மூலம் சமூதாயத்தில் ஒரு அந்தஸ்தையும் கெளரவத்தையும் நம்மால் அடைய முடியம் என்கிறது வாஸ்து குறிப்புகள். இந்த வழிகளின் மூலம் நம்மை நாமலே அஸ்தஸ்து மிக்கவர்களாக மாற்றிக்கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்.. இந்த வாரமே இந்த நான்கு ராசிகளின் வாழ்க்கை மாறும்.. வருமான வளர்ச்சி இருக்கும்!

Dec 24, 2024 06:58 AM

6 வது வீட்டில் சனி..தொழிலில் சிரமம், தடுமாற்றம்.. பாடம் கற்பிக்கப்போகும் காகவாகனன்- தனுசு ராசிக்கு 2025 எப்படி?

Dec 24, 2024 06:52 AM

இந்த ராசிகளின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. கேதுவின் பெயர்ச்சி இவர்களுக்கு சாதகமாக இருக்கு!

Dec 24, 2024 06:51 AM

சனியின் நேரடி பெயர்ச்சி.. மகரம், ரிஷபம், கன்னி ராசிகளின் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. கஷ்டங்கள் விலகும்!

Dec 24, 2024 06:43 AM

'சிறப்பான நாள் மக்களே.. செல்வம் தேடி வரும்.. கவனமா முடிவெடுங்க' இன்று டிச.24 மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளின் பலன்கள்!

Dec 24, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.24 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 23, 2024 04:55 PM

பிரபலமடைய பெரிதும் உதவியாக இருக்கும் வாஸ்து குறிப்புகள் பற்றி இங்கு பார்ப்போம்.

  • வீட்டைச் சுற்றி நேர்மறையான ஆற்றல் மாற்றங்களைக் கொண்டு வருவது உயர்ந்த வாழ்க்கைத் தரத்திற்கு வழிவகுக்கும்.
  • துர்க்கை வழிபாடு என்பது மகத்தான பலன்களைத் தந்தருளும். எனவே புகழ் பெற துர்கா தேவியை வழிபடுங்கள். கிராம்பு, வளையல், கற்பூரம், செம்பருத்தி மலர்கள், வெண்கலம் மற்றும் வாசனை திரவியங்களை துர்க்கை தேவியின் பாதத்தில் வைத்து பூஜை செய்யவும். பெரியவர்களை மதிக்கவும்
  • சூரிய பகவானை வேண்டிக்கொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்க பெறலாம் என்பது ஐதீகம். சமூகத்தில் புகழ் பெற்றவர்களாக மாற சூரிய பகவானை வழிபடுங்கள். சூரியக் கடவுளை வணங்கி, மஞ்சள் துணி மற்றும் சிவப்பு சந்தனத்தை மற்றவர்களுக்கு தானம் செய்யுங்கள்.
  • பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மகிழ்ச்சியின் பெருங்கடலாக கருதப்படுகிறார். அதனால் தான் அவரின் படத்தை நம் வீட்டில் வைக்க வேண்டும். கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வைத்தால் அமைதியான சூழல் உருவாகும் என நம்பப்படுகிறது.
  • உங்களை சுற்றி இருக்கும் நேர்மறை சிந்தனை உள்ளவர்களுடன் எப்போதும் பழகுங்கள். வீட்டை விட்டு வெளியே செல்லும் முன்பு நெற்றியில் குங்கும் திலகமிட்டு செல்லுங்கள்.

மேற்கண்ட குறிப்புகளைப் பின்பற்றினால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் அதிகரிக்கும். இது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் நல்ல அதிர்ஷ்டத்தைத் தருகிறது.

திங்கட்கிழமை வீட்டை விட்டு வெளியே செல்லும் முன் கண்ணாடியில் உங்கள் முகத்தை பார்த்துவிட்டு செல்லவும். செவ்வாய்க்கிழமையன்று வீட்டை விட்டு வெளியேறும் முன் இனிப்புகளை சாப்பிடுங்கள். புதன்கிழமை கொத்தமல்லி இலையை சாப்பிட்டுவிட்டு வெளியே செல்லவேண்டும். வியாழன் அன்று நீங்கள் ஏதாவது விசேஷ வேலைக்காக வெளியே செல்ல வேண்டி இருந்தால், சிறிதளவு பாசிப்பருப்பை உங்கள் வாயில் போட்டு சாப்பிட வேண்டும். வெள்ளிக் கிழமையன்று பாலில் செய்யப்பட்ட பொருட்களை உட்கொள்ளவது நன்மை பயக்கும். நீங்கள் சனிக்கிழமை ஏதாவது வேலைக்காகப் புறப்பட்டால், கிளம்பும் முன் வெண்ணெய் (நெய்) தெளிக்கவும். நீங்கள் ஞாயிற்றுக்கிழமை சில விசேஷ வேலைகளுக்காக வெளியே செல்கிறீர்கள் என்றால், உங்களுடன் ஒரு வெற்றிலையை வைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

அடுத்த செய்தி