Vaikuntha Ekadashi 2023: இறைவனடி சேர்க்கும் வைகுண்ட ஏகாதசி விரதம்!
Jan 02, 2023, 11:22 AM IST
பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபட உகந்த நாளாக மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி திருநாள் விளங்குகிறது.
இந்துக்களின் முக்கிய திருநாளாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் வைகுண்ட ஏகாதசி திருநாளும் ஒன்று. இந்த திருநாளானது மார்கழி மாதத்தில் முக்கிய நிகழ்வாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் இறைவனை நேரடியாக சரணடையலாம் என்பது அதிகமாக உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
வைகுண்ட ஏகாதசி விரதம்
இறைவனடி சேர வேண்டும் என்று நினைக்கும் பக்தர்களுக்கு வைகுண்ட பதவி கொடுப்பதற்காக இந்நாளில் வைகுண்ட கதவுகள் திறக்கப்படுகிறது. புனிதமாக கருதப்படும் மார்கழி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை 11 ஆம் நாளில் வைகுண்ட ஏகாதசி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த திருநாளில் பகல் பத்து, இரா பத்து என 20 நாட்கள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதில் இந்த பகல் 10 முடியும் பத்தாம் நாள் வைகுண்ட ஏகாதசி என கூறப்படுகிறது. சொர்க்கவாசல் திறக்கப்படும் இந்த திருநாளில் விரதம் இருந்து வழிபட்டால் நேரடியாக இறைவனடி சேரலாம் என்பது அதிகமாக உள்ளது.
அனைத்து பெருமாள் கோயில்களிலும் இன்று சொர்க்கவாசல் திறப்பு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதிகாலை 2.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம் மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் வெகு விமர்சையாக நடைபெற்றது. 108 வைணவ தளங்களில் முதல் தலமாக விளங்கும் திருச்சி ஸ்ரீ அரங்கநாதர் சுவாமி திருக்கோயில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிகவும் விமர்சையாக நடைபெற்றது.
ஜனவரி 1ஆம் தேதியான நேற்று பகல் பத்து முடிவடைந்த நிலையில் இன்று அதிகாலை 4.45 மணி அளவில் பரமபத வாசல் திறப்பு அதாவது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அவ்வாசல் வழியாக எம்பெருமாள் பல்வேறு ஆபரணங்களை அணிந்து சொர்க்கவாசல் வழியாக கடந்து வந்தார்.
இந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் சைனகோளத்தில் அமர்ந்திருக்கும் பெருமாளை காண்பது மிகவும் சிறப்பாகும். அதன் காரணமாக திருச்சி ஸ்ரீ ரங்கம் அரங்கநாதர் கோயிலில் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தன.
ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நம்பர் மாலை இன்று இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.