தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ruchaka Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொட்டும் ருச்சக யோகம் யாருக்கு?

Ruchaka Yogam: ’மேஷம் முதல் மீனம் வரை!’ பணம் கொட்டும் ருச்சக யோகம் யாருக்கு?

Kathiravan V HT Tamil

Feb 03, 2024, 06:45 PM IST

google News
“Ruchaka Yogam: ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு, தனது உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருப்பார்கள்”
“Ruchaka Yogam: ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு, தனது உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருப்பார்கள்”

“Ruchaka Yogam: ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு, தனது உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருப்பார்கள்”

யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம் ஆகிய யோகங்களுக்கு மத்தியில் ’ருச்சக யோகம்’ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சமீபத்திய புகைப்படம்

யார் இந்த பாபா வங்கா.. பார்வை இல்லை. இமைகள் திறக்காது.. உண்மையில் பெண்.. ஆனால் பாபா வங்கா என அறியப்பட்டவரின் கதை!

Dec 21, 2024 06:37 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:31 PM

குரு 2025 பிப்ரவரி வரை விடமாட்டார்.. இந்த ராசிகள் கொஞ்சம் மோசம்.. பணத்தில் குதித்து விளையாடுவது யார்?

Dec 21, 2024 03:26 PM

சனி வாயை திறந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் மீது விடாமல் கொட்டும் கோடிகள்.. உங்க ராசி என்ன?

Dec 21, 2024 03:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.22 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 21, 2024 03:19 PM

மேஷம், கடகம், விருச்சிகம் ராசியினரே.. குரு பகவான் குறி வச்சுட்டார்.. மகிழ்ச்சி தேடி வரும் பாருங்க!

Dec 21, 2024 01:48 PM

ஒருவரது சுய ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் ’மங்களன்’ என்ற செவ்வாய் கிரகம் ஆட்சி, உச்சம் பெற்று அமைந்தால் `ருச்சக யோகம்’ ஏற்படுகிறது என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 

இந்த ருச்சக யோகத்தை கொண்டவர்கள் இளமையையும், அழகையும் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆன்மிகம் மற்றும் தெய்வ நம்பிக்கையில் அசையாத உறுதி கொண்டவர்களான இவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு இருக்கும். 

செவ்வாய் கிரகம், வீரம் மற்றும் ரத்தம் ஆகியவற்றுக்கு காரகனாக விளங்குகிறார். ஒருவரது மன தைரியத்திற்கும், அண்ணன் - தம்பிகள், சகோதர-சகோதரிகள் பாசம் ஆகியவற்றுக்கு இந்த அமைப்பு அவசியம். 

ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றவர்களுக்கு, தனது உயிரையே கொடுக்கும் நண்பர்கள் இருப்பார்கள் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

ரூச்சக யோகம் கொண்டவர்களுக்கு, ராணுவம், போலீஸ் துறையில் இருப்பவர்களுக்கு உயர்ந்த பதவிகள் கிடைக்கும். 

இவர்கள் யாரை பற்றியும் அஞ்சாமல் கேள்வி கேட்கும் மன தைரியம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களது வீரியத்தால் அரசியலில் பெரிய பதவிகள் தேடி வரும். 

உடன் பிறந்த சகோதரர் மற்றும் பங்காளிகள் ஆகியோரது ஆதரவு பக்கபலமாக இருக்கும். மருத்துவத் துறையில் நற்பெயர் எடுப்பதற்கு ருச்சக யோகம் பெரிதும் துணையாக இருக்கும். 

ரூச்சக யோகத்தில் பிறந்தவர்களுக்கு செவ்வாயின் பிரதான காரகத்துவமான பூமி யோகம் இயற்கையாகவே அமைந்திருக்கும். பூமி அல்லது நிலம் மூலம் பல்வேறு லாபங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி