தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Ht Yatra: குழந்தை பாக்கியம் தரும் விநாயகர்.. ஆசியாவிலேயே இல்லாத அதிசயம்.. கருவறையில் வீற்றிருக்கும் உச்சிஷ்ட கணபதி

HT Yatra: குழந்தை பாக்கியம் தரும் விநாயகர்.. ஆசியாவிலேயே இல்லாத அதிசயம்.. கருவறையில் வீற்றிருக்கும் உச்சிஷ்ட கணபதி

Mar 25, 2024, 06:00 AM IST

google News
Sri Uchishta Ganapathy temple: தமிழ்நாட்டில் விநாயகருக்கென சிறப்புமிக்க பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.
Sri Uchishta Ganapathy temple: தமிழ்நாட்டில் விநாயகருக்கென சிறப்புமிக்க பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.

Sri Uchishta Ganapathy temple: தமிழ்நாட்டில் விநாயகருக்கென சிறப்புமிக்க பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.

மிகப்பெரிய பக்தர்கள் கூட்டத்தை தனக்கென வைத்திருப்பவர் விநாயகர் பெருமான். உலகம் முழுவதும் பக்தர்கள் இருந்தாலும் இந்தியாவில் இவர்களுக்கு கோடான கோடி பக்தர்கள் இருந்த வருகின்றனர். அனைத்து விதமான மக்களுக்கும் ஏற்ற கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

அதேசமயம் முழு முதல் கடவுளாக விளங்கிவரும் விநாயகர் எந்த கோயிலுக்கு சென்றாலும் முதல் கடவுளாக அமர்ந்திருப்பார். முதலில் இவரை வணங்கி விட்டு தான் மற்ற அனைவரையும் வணங்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் நியதி.

மரத்தடியில் தொடங்கி மிகப்பெரிய மலை வரை அனைத்து இடங்களிலும் கோயில் கொண்டு அனைத்துவித மக்களுக்குமான கடவுளாக விநாயகர் விளங்கி வருகின்றார். தமிழ்நாட்டில் இவருக்கென சிறப்புமிக்க பல்வேறு விதமான கோயில்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட கோயில்களில் ஒன்றுதான் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள உச்சிஷ்ட கணபதி திருக்கோயில்.

தல பெருமை

 

ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் இந்த கோயில் அமைந்திருக்கின்றது. அதற்குப் பிறகு பரந்த நிலம் உள்ளே காணப்படும் அதனை கடந்து சென்றால்தான் உச்சிஷ்ட கணபதி காண முடியும். இங்கு இருக்கக்கூடிய விநாயகரை வழிபட்டால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாகும்.

இந்த கோயில் காலை எட்டு மணி முதல் 11.30 மணி வரை, மாலை 6:00 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆசியாவிலேயே உச்சிஷ்ட கணபதியை மூலவராக கொண்டு இருக்கக்கூடிய மிகப்பெரிய கோயிலாக இந்த திருக்கோயில் விளங்கி வருகிறது.

இது மிகவும் பழமையான கோவிலாக கருதப்படுகிறது இந்த கோயிலை சுற்றி இருக்கக்கூடிய இடுபாடுகளுடன் விளங்கும் சுற்றுச்சூழலை பார்த்தால் அனைவருக்கும் தெரியும்.

இந்த தளத்தில் கருவறையில் இருக்கக்கூடிய விநாயகர் ஒரு பெண்ணின் உபஸ்தத்தில் தும்பிக்கை வைத்தது போல இருக்கும். இந்த உச்சிஷ்ட கணபதி காமரூபமாக பக்தர்களுக்கு காட்சி கொடுத்திருக்கிறார்.

குழந்தை பெற்று தாய்மை அடைவதை ஒரு பெண் பெருமையாக கருதுகிறார் அதற்கு பிறகு அந்த குழந்தை தலைசிறந்த நாயகனாக வளர்வதை அந்த தாய் விரும்புகிறார். அப்படி ஏற்படக்கூடிய ஆசைகள் நிறைவேற வேண்டுமென்றால் இங்கு இருக்கக்கூடிய உச்சிஷ்ட கணபதி வழிபட்டால் நிறைவேறும் என்பது ஐதீகமாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய விநாயகர் கோயில்களில் இப்படி ஒரு அமைப்பு எங்கும் கிடையாது. இந்த கோயிலில் நெல்லையப்பருக்கு என தனி சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.

தல வரலாறு

 

பல்வேறு அவதாரங்களை விநாயகப் பெருமான் எடுத்திருக்கின்றார் அவர் எடுத்திருக்கக் கூடிய 32 வடிவங்களில் இந்த உச்சிஷ்ட கணபதி வடிவமும் ஒன்றாகும். ஒரு பெண்ணை ஆலிங்கனம் செய்தபடி விநாயகர் காட்சி கொடுப்பது என்பது மிகவும் அபூர்வமான காட்சி ஆகும். அதுவே இந்த உச்சிஷ்ட கணபதி ஆகும்.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு கண்கண்ட தெய்வமாக இந்த உச்சிஷ்ட கணபதி விளங்கி வருகின்றார். உச்சிஷ்ட கணபதி மூலவராகக் கொண்டு ஆசியாவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கோயில் இது என்பதால் விநாயகர் கோயில்களில் அதிசயங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

அமைவிடம்

 

இந்த உச்சிஷ்ட கணபதி திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயிலுக்கு செல்ல பேருந்து வசதிகள் மற்றும் வாகன வசதிகள் உணவு விடுதிகள் என அனைத்து வசதிகளும் உள்ளன.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

https://twitter.com/httamilnews

 

Google News: https://bit.ly/3onGqm9

 

அடுத்த செய்தி