'மேஷம் முதல் மீனம் வரை!’அரசு வேலை! ஆட்சி அதிகாரத்தில் அமர வைக்கும் பாச யோகம் யாருக்கு?
Nov 30, 2024, 06:52 PM IST
உபயோகங்களில் முக்கிய யோகமாக ‘பாச யோகம்’ உள்ளது. ராகு, கேது நீங்களாக உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களும் ஏதேனும் 5 வீடுகளுக்குள் அமைய பெற்றால் பாச யோகம் உண்டாகின்றது.
ஜோதிடத்தில் யோகம் என்ற சொல்லு சேர்க்கை என்று பொருள்படுகிறது. ஒருவருடைய ஜாதகத்தில் கிரகங்களின் நகர்வு, பார்வை, ஆட்சி, உச்சம், நீசம் உள்ளிட்டவைகளை வைத்து பல்வேறு யோகங்கள் ஏற்படுகின்றன. ராஜயோகம், விபரீத ராஜயோகம், கஜகேசரி யோகம், பாக்கிய யோகம், ஜோதி யோகம் உள்ளிட்ட பல்வேறு யோகங்கள் உள்ளன. அந்த வகையில் முக்கியத்துவம் பெற்ற உப யோகமாக ’பாச யோகம்’ விளங்குகின்றது.
சமீபத்திய புகைப்படம்
பாச யோகம் என்றால் என்ன?
உபயோகங்களில் முக்கிய யோகமாக ‘பாச யோகம்’ உள்ளது. ராகு, கேது நீங்களாக உள்ள சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய 7 கிரகங்களும் ஏதேனும் 5 வீடுகளுக்குள் அமைய பெற்றால் பாச யோகம் உண்டாகின்றது.
உதாரணமாக ஒரு சிம்மம் லக்ன ஜாதகத்தில் லக்னத்தில் ராகுவும், 7ஆம் இடத்தில் கேதுவும் உள்ளனர். லக்னாதிபதி சூரியன் மேஷம் ராசியில் உச்சமும், ரிஷபத்தில் சுக்கிரன், புதன், அதற்கு அடுத்த வீட்டில் சந்திரனும், அடுத்த வீட்டில் குரு, சனி, செவ்வாய் ஆகிய கிரகங்கள் இருந்தால் பாச யோகம் உண்டாகும்.
பாச யோகத்தின் பலன்கள்
பாச யோகம் கொண்டவர்கள் நேர்மையாளர்களாக விளங்குவர். கடும் உழைப்பு மற்றும் முயற்சியால் பெரும் வெற்றிகளை குவிப்பார்கள். அரசியலில் ஆதாயம், உறவுகளால் மகிழ்ச்சி, நீண்ட ஆயுள், நண்பர்களின் பலம், அந்நிய தேசத்தில் வாசம் செய்வது உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும்.
அரசுப்பணி, அரசியலில் செல்வாக்கு ஆகியவற்றை மிக இலகுவாக அடைவார்கள். தான் சார்ந்த மதம் மற்றும் இனத்தால் போற்றப்படுவார்கள். நிதி நிர்வாகத்தில் தலைமை பொறுப்பு ஏற்றல், பெரும் தொழில் முனைவோர்களுக்கு இந்த யோகம் மிக சிறப்பை தரும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.