Today Rasipalan (21.07.2024) நெருக்கடிகள் குறையுமா? வாய்ப்புகள் கைகூடுமா?.. உங்கள் ராசிக்கான பலன்கள் இதோ..!
Jul 21, 2024, 05:30 AM IST
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 21) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 21 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். விவசாயம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிக விஷயங்களில் தெளிவு பிறக்கும்.
ரிஷபம்
உறவினர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விவசாய பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மிதுனம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிறு தூர பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விளையாட்டான பேச்சுக்கள குறைத்துக் கொள்ளவும். நிதானமான செயல்பாடுகள் நம்பிக்கையை மேம்படுத்தும்.
கடகம்
நண்பர்களின் மூலம் சாதகமான உதவிகள் கிடைக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும்.
சிம்மம்
உறவினர்களின் வழியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத பரிசு கிடைக்கும்.
கன்னி
தனிப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை. வெளியூர் பயணங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவீர்கள். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
துலாம்
சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். கல்வி பணிகளில் ஆர்வம் ஏற்படும். அரசு பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். பகை விலகும்.
விருச்சிகம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய் வழியில் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
தனுசு
குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். பணி நிமித்தமான அலைச்சல் மேம்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும்.
மகரம்
நீண்ட நாட்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் உண்டாகும். முன்கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரத்தில் கூடுதல் கவனம் தேவை.
கும்பம்
போட்டி விஷயங்களில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். நினைத்த சில பணிகளால் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் ஆர்வமின்மை ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும்.
மீனம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்