தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasipalan (20.07.2024) யாருக்கு அலைச்சல் உண்டாகும்?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Today Rasipalan (20.07.2024) யாருக்கு அலைச்சல் உண்டாகும்?..மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்!

Karthikeyan S HT Tamil

Jul 20, 2024, 05:30 AM IST

google News
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 20) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 20) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today RasiPalan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (ஜூலை 20) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today RasiPalan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

'பணத்தில் குளிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு.. உண்மையா இருங்க.. நினைத்தது நடக்கும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன் இதோ!

Nov 24, 2024 05:00 AM

கடக ராசி மூலம் கட்டிப்போட்டு அடி.. செவ்வாய் புகுந்து விட்டார்.. இனி இந்த ராசிகள் ரெடியா இருக்கணும்!

Nov 23, 2024 03:19 PM

போட்டு தாக்கவரும் புதன்.. இனி இந்த ராசிகள் மீது பணமழை.. அதிர்ஷ்டத்தில் உறங்க போவது யார்?

Nov 23, 2024 03:10 PM

குரு.. வாழ்க்கையை புரட்டப் போகிறார்.. தரமான சம்பவத்திற்கு தயாராகும் ராசிகள்.. பொட்டி ரெடி

Nov 23, 2024 11:58 AM

சுபயோகத்தில் நனையும் ராசிகள்.. செவ்வாய் மூலம் ஜாக்பாட் அடிக்கும் ராசிகள்.. ரெடியா இருந்தா தானா வரும்!

Nov 23, 2024 11:53 AM

மேஷம்

வாக்குறுதிகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள்.

ரிஷபம்

குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் கிடைக்கும். நினைத்த சில பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும்.

மிதுனம்

உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மருத்துவத் துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும்.

கடகம்

புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணி மாற்றம் சார்ந்த எண்ணம் மேம்படும். கடன் செயல்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உறவினர்களால் நன்மை உண்டாகும். உயர் அதிகாரிகளிடத்தில் கவனம் வேண்டும். சிந்தனைகளில் இருந்துவந்த சஞ்சலம் விலகும்.

சிம்மம்

விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர்கல்வி குறித்த சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். மின்சார தொழிலில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். மறதி பிரச்சனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வெளியூர் பயணங்களில் கவனம் வேண்டும்.

கன்னி

வாகன பிரச்சனைகள் குறையும். தந்தைவழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் நற்பெயர்கள் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும்.

துலாம்

வேகத்தை விட விவேகம் நன்மை தரும். வாகன மாற்ற எண்ணங்கள் உண்டாகும். வெளி வட்டாரங்களில் மதிப்பு மேம்படும். சமூக நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும்.

விருச்சிகம்

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு செயல்களில் பொறுமை வேண்டும். தோற்றப் பொலிவு மேம்படும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும்.

தனுசு

கடன் விஷயங்களில் அலைச்சல் ஏற்படும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். இழுபறியாக இருந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஈடுபாடு ஏற்படும்.

மகரம்

உயர் கல்வி முடிவுகளில் ஆலோசனை வேண்டும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பொது இடங்களில் பொறுமையை கையாளவும். வியாபார பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். தம்பதிகளுக்குள் அனுசரித்துச் செல்லவும்.

கும்பம்

எதிர்பாராத சில உதவிகள் மூலம் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் உதவிகள் மூலம் சில பிரச்சனைகள் குறையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகப் பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.

மீனம்

தன்னம்பிக்கை உண்டாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறி குறையும். எதிர்காலம் சார்ந்த புதிய இலக்குகள் பிறக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி