தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Today Rasi Palan (01.09.2023): மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும் ? - உங்களுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Today Rasi palan (01.09.2023): மாதத்தின் முதல் நாள் எப்படி இருக்கும் ? - உங்களுக்கான இன்றைய பலன்கள் இதோ!

Karthikeyan S HT Tamil

Sep 01, 2023, 05:00 AM IST

google News
Today Rasi Palan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்றைய (செப்டம்பர் 01) நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rasi Palan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்றைய (செப்டம்பர் 01) நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Today Rasi Palan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்றைய (செப்டம்பர் 01) நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய (செப்டம்பர் 01) பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.

சமீபத்திய புகைப்படம்

கும்ப ராசியில் நுழையும் சுக்கிரன்.. இந்த வாரமே இந்த நான்கு ராசிகளின் வாழ்க்கை மாறும்.. வருமான வளர்ச்சி இருக்கும்!

Dec 24, 2024 06:58 AM

6 வது வீட்டில் சனி..தொழிலில் சிரமம், தடுமாற்றம்.. பாடம் கற்பிக்கப்போகும் காகவாகனன்- தனுசு ராசிக்கு 2025 எப்படி?

Dec 24, 2024 06:52 AM

இந்த ராசிகளின் வளர்ச்சியை இனி யாராலும் தடுக்க முடியாது.. கேதுவின் பெயர்ச்சி இவர்களுக்கு சாதகமாக இருக்கு!

Dec 24, 2024 06:51 AM

சனியின் நேரடி பெயர்ச்சி.. மகரம், ரிஷபம், கன்னி ராசிகளின் வாழ்க்கையில் இனி அதிர்ஷ்டம் கொட்ட போகுது.. கஷ்டங்கள் விலகும்!

Dec 24, 2024 06:43 AM

'சிறப்பான நாள் மக்களே.. செல்வம் தேடி வரும்.. கவனமா முடிவெடுங்க' இன்று டிச.24 மேஷம் முதல் மீனம் வரையான ராசிகளின் பலன்கள்!

Dec 24, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. நாளை டிச.24 உங்கள் கையில் அதிகம் பணம் சேருமா? - ராசிபலன் இதோ

Dec 23, 2024 04:55 PM

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்றைய தினம் உங்களுக்கு தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

ரிஷபம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். எதிலும் ஆதாயத்துடன் செயல்படுவீர்கள்.

மிதுனம்

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.

கடகம்

உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செல்லப்பிராணிகளால் அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளவும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கவனம் வேண்டிய நாள்.

சிம்மம்

எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவேகம் வேண்டிய நாள்.

கன்னி

பழகும் விதங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் எதிர்பாராத அலைச்சல்கள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். தடைகள் குறையும் நாள்.

துலாம்

ஆசைகள் நிறைவேறும் நாள். சவாலான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அதிகாரிகளின் மறைமுகமான ஆதரவு திருப்தியை ஏற்படுத்தும்.

விருச்சிகம்

வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். உயர்கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அரசு பணிகளால் ஆதாயம் உண்டாகும். அறிமுகம் நிறைந்த நாள்.

தனுசு

திட்டமிட்ட பணிகளை எளிதில் செய்து முடிக்கும் வாய்ப்பு உண்டாகும். வாகன மாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சிறுதொழிலில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். மறைமுகமான திறமைகள் வெளிப்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். முயற்சிக்கு உண்டான சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும்.

மகரம்

நண்பர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான நெருக்கடியான சூழ்நிலைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கும்பம்

எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். கனிவான பேச்சுக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தும். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.

மீனம்

வெளியாட்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். மதிப்பு நிறைந்த நாள். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி