Today Rasi palan (26.8.2023): இந்த நாள் எப்படி இருக்கும் ?..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ!
Aug 26, 2023, 05:00 AM IST
Today Rasi Palan: ஒவ்வொரு ராசிகளுக்கும் இன்றைய (ஆகஸ்ட் 26) நாள் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய (ஆகஸ்ட் 26) பலன்கள் எப்படி இருக்கிறது என்பதை கீழே விரிவாக பார்க்கலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
திறமைக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.
ரிஷபம்
கடன் செயல்களில் பொறுமை வேண்டும். வழக்கு சார்ந்த விஷயங்களில் இழுபறியான சூழல் ஏற்படும். நெருக்கடியான சூழ்நிலைகளின் மூலம் வருத்தம் உண்டாகும். வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. அனுபவம் மேம்படும் நாள்.
மிதுனம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நண்பர்களின் மத்தியில் செல்வாக்கு உயரும். உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் உண்டாகும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். உதவிகள் கிடைக்கும் நாள்.
கடகம்
எதிராக இருந்தவர்களால் ஆதாயம் மேம்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சிம்மம்
எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கல்வியில் சில மாற்றமான சூழல் அமையும். மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். பிரபலமானவர்களின் தொடர்பு உண்டாகும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு காரியங்களில் பொறுமை வேண்டும்.
கன்னி
பார்வை தொடர்பான பிரச்னைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும்.
துலாம்
எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உண்டாகும். சில விஷயங்களை திட்டமிட்டு செயல்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி உறவுகளால் சில நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபாரத்தில் மேன்மை உண்டாகும்.
விருச்சிகம்
புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரப் பணிகளில் மதிப்பு மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள்.
தனுசு
கொடுக்கல், வாங்கலில் ஆதாயம் அடைவீர்கள். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். கம்பீரமான பேச்சுக்களால் காரிய அனுகூலம் உண்டாகும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். ஓய்வு வேண்டிய நாள்.
மகரம்
அரசு பணிகளில் ஆதாயம் உண்டாகும். அதிகாரப் பணிகளில் கவனத்துடன் இருக்கவும். ஆன்மிகத்தில் தெளிவு பிறக்கும். இடமாற்ற சிந்தனைகள் அதிகரிக்கும். இனம்புரியாத சில சிந்தனைகளால் தயக்கம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.
கும்பம்
அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். கடினமான விஷயங்களையும் எளிதாக முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு மேம்படும்.
மீனம்
அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் பிறக்கும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், ஆன்மிகம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்