Today Rashi Palan (26.09.2024) இன்றைய ராசிபலன்கள்..இன்று உங்களுக்கு எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
Sep 26, 2024, 05:12 AM IST
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 26) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும்.
ரிஷபம்
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும்.
மிதுனம்
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். லாபம் நிறைந்த நாள்.
கடகம்
பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
சிம்மம்
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைப்போக்கில் தெளிவு பிறக்கும்.
கன்னி
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். அரசு செயல்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும்.
துலாம்
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் அலைச்சல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஆலோசனை வேண்டும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும்.
தனுசு
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள்.
மகரம்
பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் பிறக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும்.
கும்பம்
செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவசாயத்தில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பொன், பொருள் மீது ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்
சகோதர உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் ஓரளவு குறையும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் வழி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும்.
டாபிக்ஸ்