Today Rashi Palan (25.09.2024) இன்றைய ராசிபலன்கள்..இன்று நாள் எப்படி இருக்கும்?.. 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ..!
Sep 25, 2024, 06:23 AM IST
Today Rashi Palan, Daily Horoscope: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசியினருக்கு இன்று (செப்டம்பர் 25) வேலை, தொழில், வருமானம், ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Today Rashi Palan, Daily Horoscope: ஜோதிட கணிப்புகளின் படி, ஒவ்வொரு ராசிகளுக்கும் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதியான இன்று எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். வாக்குவன்மையின் மூலம் ஆதாயமடைவீர்கள். நிலுவையில் இருந்துவந்த சில பணிகளை செய்து முடிப்பீர்கள். மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற பலன்கள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் அமையும்.
ரிஷபம்
புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டாகும். வாக்கு சாதுரியத்தின் மூலம் நன்மை ஏற்படும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். சக ஊழியர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். குடும்ப நபர்களிடம் மதிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்
எதிர்மறையான சிந்தனைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்கள் மத்தியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழுதான வாகனங்களை சீர் செய்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வெளியூர் வேலை வாய்ப்புகள் ஈடேறும். பொறுமை வேண்டிய நாள்.
கடகம்
சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சனை குறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வெளியூர் பயணங்களால் வீண் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதால் நன்மை உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும்.
சிம்மம்
தொழிலில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் மேம்படும். பிரிந்த உறவினர்கள் வலிய வருவார்கள். நீண்ட கால எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கலைப் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.
கன்னி
பயணங்களின் மூலம் எண்ணங்கள் ஈடேறும். அரசு வழியில் உதவிகள் சாதகமாக அமையும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நட்பு வட்டாரம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈர்ப்பு அதிகரிக்கும். சுப காரிய எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும்.
துலாம்
வெளி வட்டாரங்களில் மரியாதை அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் எதிர்பாராத மாற்றங்கள் ஏற்படும். புதிய நபர்களால் மாற்றமான சூழல் அமையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம்
குழந்தைகளால் தேவையில்லாத மன சங்கடங்கள் உண்டாகும். பொழுதுபோக்கு செயல்களால் கையிறுப்புகள் குறையும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். உறவினர்களுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிக்கவும். .
தனுசு
நண்பர்களின் வருகை மனதிற்கு மனநிறைவை கொடுக்கும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்தி லாபம் பெறுவீர்கள். வங்கி கடன் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு பொறுப்புகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.
கும்பம்
மனதில் சுபகாரியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக ஏற்ற, இறக்கம் உண்டாகும். வாகன பராமரிப்பு தொடர்பாக செலவுகள் ஏற்படும். அடமான பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
மீனம்
மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சில நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். நற்செயல் நிறைந்த நாள்.
டாபிக்ஸ்