தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.17 உங்களுக்கு சாதகமாக இருக்குமா?

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீன ராசியினரே.. இன்று டிச.17 உங்களுக்கு சாதகமாக இருக்குமா?

Karthikeyan S HT Tamil

Dec 17, 2024, 05:10 AM IST

google News
ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு வாரத்தின் முதல் நாளான இன்றைய நாள் (டிசம்பர் 17) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம். (Image: freepik )
ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு வாரத்தின் முதல் நாளான இன்றைய நாள் (டிசம்பர் 17) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிட கணக்கீட்டின்படி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 6 ராசியினருக்கு வாரத்தின் முதல் நாளான இன்றைய நாள் (டிசம்பர் 17) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. 

சமீபத்திய புகைப்படம்

அன்பின் அரவணைப்பு சாத்தியமா.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசியா நீங்கள்.. இன்று டிச.18 உங்கள் நாள் சாதகமா பாருங்க

Dec 18, 2024 05:00 AM

பணியிடத்தில் மாற்றம்! அவசரப்பட வேண்டாம்! கவனமாக இருக்க வேண்டிய காலம்! நாளைய ராசிபலன் இதோ!

Dec 17, 2024 07:23 PM

கொட்டிக் கொடுக்கப்போகும் சனி! 2025 இல் இந்த ராசிகளுக்கு பண மழை தான்! தொழில் தொடங்க சரியான நேரம்!

Dec 17, 2024 06:06 PM

குரு கும்மாளம் போட வைப்பார்.. வானவில் போல் ஜொலிக்கும் ராசிகள்.. இனி உங்களுக்கு நீங்கதான்!

Dec 17, 2024 06:05 PM

சனி 2025 வச்சு செய்வார்.. தப்பிச்சு ஓடுங்க.. பண மூட்டை தலைப்பு கொட்ட போகுது.. பணமழை கொட்டும்!

Dec 17, 2024 05:58 PM

இது குரு காலம்.. தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. வேலைய தொடங்கிட்டார்.. ராஜ யோகம் தாங்க!

Dec 17, 2024 05:51 PM

ஜோதிட கணக்கீட்டின் படி, டிசம்பர் 17 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்த வகையில், துலாம் முதல் மீனம் வரையிலான 6 ராசிக்காரர்களுக்கு இன்று என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

துலாம்

துலாம் ராசி அன்பர்களே தகவல் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழல் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பழகும் தன்மையில் சில மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உதவி கிடைக்கும்.

மகரம்

மகர ராசி அன்பர்களே பயணம் செய்வதில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நுட்பமான சில விசயங்களை புரிந்துகொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு மறையும். மனதளவில் புதிய பக்குவம் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும்.

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வமும், விரயமும் உண்டாகும்.  பயணத் தடைகள் மறையும்.

மீனம்

மீன ராசி அன்பர்களே தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி