தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம் முதல் கன்னி ராசி வரை.. இன்று டிச.20 எந்தெந்த ராசிக்கு அபாரமான நன்மைகள் கிடைக்கும் பாருங்க! - ராசிபலன் இதோ!

மேஷம் முதல் கன்னி ராசி வரை.. இன்று டிச.20 எந்தெந்த ராசிக்கு அபாரமான நன்மைகள் கிடைக்கும் பாருங்க! - ராசிபலன் இதோ!

Karthikeyan S HT Tamil

Dec 20, 2024, 05:00 AM IST

google News
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 20 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 20 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 20 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசியும் ஒரு கிரகத்தால் ஆளப்படுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கத்தின் அடிப்படையில் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. டிசம்பர் 20 ஆம் தேதியான நாளைய தினத்தை பொறுத்தவரை வெள்ளிக்கிழமை லட்சுமி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாளில், லட்சுமி தேவியை வழிபடுவது அனைத்து ராசிகளுக்கும் உகந்ததாகும். ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 20 ஆம் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்

Dec 22, 2024 04:31 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:28 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:20 PM

2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!

Dec 22, 2024 02:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். குழப்பங்கள் விலகும். இடம் மாறுவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்கள் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். 

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே கல்வி தொடர்பான பணிகளில் வெற்றி பெறுவீர்கள். தொழிலில் மேன்மையான சூழல் உண்டாகும். மனம் திறந்து பேசுவதன் மூலம் அமைதி ஏற்படும். தனிப்பட்ட விசயங்களை பகிர்வதை தவிர்க்கவும். தாயின் வழியில் ஆதரவுகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே தாய் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் காணப்படும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் காணப்படும். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பேச்சுக்களில் பொறுமை வேண்டும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். வேலையாட்கள் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடி உண்டாகும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி