தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் பாருங்க!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.19 எந்த ராசிக்கு செல்வாக்கு அதிகரிக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil

Dec 19, 2024, 05:00 AM IST

google News
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 19 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 19 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 19 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 19 ஆம் தேதியான இன்று (வியாழக்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

மேஷம் முதல் மீனம் வரை! ’உங்களுக்கு ஆயுள் கெட்டியாக உள்ளதா?’ வாழ்நாளை சொல்லும் 8ஆம் இட ரகசியங்கள்

Dec 22, 2024 04:31 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:28 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. நாளை டிச.23 உங்களுக்கு சாதகமா.. பாதகமா பாருங்க!

Dec 22, 2024 03:20 PM

2025ல் சனி பகவான் கருணையால் கொடி கட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் எது தெரியுமா.. தொட்டதெல்லாம் வெற்றி தாங்க!

Dec 22, 2024 02:04 PM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. வரும் வாரம் சாதகமா.. உங்க அதிர்ஷ்டத்த பாக்கலாம் வாங்க!

Dec 22, 2024 01:21 PM

மேஷம்

மேஷ ராசியினரே மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். வியாபாரம் நிமித்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சுக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆதரவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை மறையும். எதிர்காலம் தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வி சார்ந்த தெளிவுகள் பிறக்கும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் இடத்தில் பொறுமை காக்கவும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே கனிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை குறைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே பெற்றோர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி