தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.18 எந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும் பாருங்க!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.18 எந்த ராசிக்கு ஜாக்பாட் அடிக்கும் பாருங்க!

Karthikeyan S HT Tamil

Dec 18, 2024, 05:00 AM IST

google News
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

ஜோதிட கணக்கீடுகளின்படி, டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) மேஷம் முதல் கன்னி வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும், எந்த ராசிக்காரர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 18 ஆம் தேதியான இன்று (புதன்கிழமை) சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும். அந்தவகையில், மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசிக்காரர்களுக்கு இன்று வேலை, தொழில், காதல், வருமானம், ஆரோக்கியம், கல்வி எப்படி இருக்கும் என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

சமீபத்திய புகைப்படம்

அன்பின் அரவணைப்பு சாத்தியமா.. மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் ராசியா நீங்கள்.. இன்று டிச.18 உங்கள் நாள் சாதகமா பாருங்க

Dec 18, 2024 05:00 AM

பணியிடத்தில் மாற்றம்! அவசரப்பட வேண்டாம்! கவனமாக இருக்க வேண்டிய காலம்! நாளைய ராசிபலன் இதோ!

Dec 17, 2024 07:23 PM

கொட்டிக் கொடுக்கப்போகும் சனி! 2025 இல் இந்த ராசிகளுக்கு பண மழை தான்! தொழில் தொடங்க சரியான நேரம்!

Dec 17, 2024 06:06 PM

குரு கும்மாளம் போட வைப்பார்.. வானவில் போல் ஜொலிக்கும் ராசிகள்.. இனி உங்களுக்கு நீங்கதான்!

Dec 17, 2024 06:05 PM

சனி 2025 வச்சு செய்வார்.. தப்பிச்சு ஓடுங்க.. பண மூட்டை தலைப்பு கொட்ட போகுது.. பணமழை கொட்டும்!

Dec 17, 2024 05:58 PM

இது குரு காலம்.. தலைகீழாக தண்ணீர் குடிக்கும் ராசிகள்.. வேலைய தொடங்கிட்டார்.. ராஜ யோகம் தாங்க!

Dec 17, 2024 05:51 PM

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிரடியான சில செயல்கள் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உறவினர்களிடம் ஒத்துழைப்புகள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அமைதி ஏற்படும். உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். பயணம் சார்ந்த விஷயங்கள் கைகூடும்.

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். முயற்சிக்கு உண்டான பாராட்டுக்கள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவுகள் பிறக்கும். தந்திரமான சில செயல்கள் மூலம் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் தடுமாற்றம் உண்டாகும். சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். ஆரோக்கியத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். வெளிவட்டார நட்பு கிடைக்கும். பேச்சு திறமை மேம்படும். வாடிக்கையாளர்களின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்

கடக ராசி அன்பர்களே எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் அமைதியின்மை ஏற்படும். சமூகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். 

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே உடன் இருப்பவர்களுடன் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மக்கள் தொடர்பு துறைகளில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனதிற்கு பிடித்த உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சிரமம் மறையும்.

கன்னி

கன்னி ராசி அன்பர்களே வியாபார இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் சாதகமான சூழல் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி