தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.02 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே.. இன்று டிச.02 உங்கள் நாள் எப்படி இருக்கும் பாருங்க..!

Karthikeyan S HT Tamil

Dec 02, 2024, 04:50 AM IST

google News
ஜோதிட கணிப்புகளின் படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் (டிச.02) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.
ஜோதிட கணிப்புகளின் படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் (டிச.02) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

ஜோதிட கணிப்புகளின் படி, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் (டிச.02) எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வேத ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் விவரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒரு கிரகம் ஆட்சி செய்கிறது. கிரக விண்மீன்களின் இயக்கத்தால் ஜாதகம் கணக்கிடப்படுகிறது. ஜோதிட கணக்குப்படி, டிசம்பர் 02 ஆம் தேதியான இன்று சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாக இருக்கும், சில ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் சிறிய பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

சமீபத்திய புகைப்படம்

'நிதானம் தேவை..நினைத்தது நடக்கும்'..மேஷம் முதல் மீனம் வரை..12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் இதோ..!

Dec 02, 2024 06:45 AM

’மேஷம் முதல் மீனம் வரை!’ சாதூர்யம்! அதிகாரம்! செல்வம் தரும் கூர்ம யோகம் யாருக்கு?

Dec 01, 2024 08:50 PM

Rasipalan: ’மேஷம் முதல் மீனம் வரை!’ நாளை டிச.02 உங்க நாள் எப்படி இருக்கும் பாருங்க!

Dec 01, 2024 08:21 PM

துலாம் முதல் மீனம் ராசி வரை.. சுக்கிரன் பெயர்ச்சியால் இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:59 AM

சுக்கிரன் பெயர்ச்சி..மேஷம் முதல் கன்னி ராசி வரை..இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க..!

Dec 01, 2024 08:30 AM

குரு 2025-ஆம் ஆண்டு வரை விடமாட்டார்.. சொல்லி அடித்த போகும் ராசிகள்.. இவர்கள் இனிமேல் கில்லி தான்

Dec 01, 2024 07:15 AM

அந்தவகையில், மேஷம் ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ஆகிய 6 ராசியினருக்கு இன்று (டிச.02) வேலை, தொழில், காதல், வருமானம், கல்வி, வேலை வாய்ப்பு, ஆரோக்கியம் எப்படி இருக்கும் என்பதை பற்றி விரிவாக இங்கு காணலாம்.

மேஷம்

மேஷம் ராசி அன்பர்களே மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவது நல்லது. நெருக்கமானவர்கள் மூலம் சில மாற்றமான சூழ்நிலைகள் உருவாகும். தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைக் குறைத்துக் கொள்ளவும். உத்தியோக பணியில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும்.  

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே குழந்தைகளால் மகிழ்ச்சியான தருணங்கள் உருவாகும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் உருவாகும். 

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே மனதில் இருந்துவந்த குழப்பங்கள் மறையும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பாராத சில உதவிகள் சாதகமாகும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். 

கடகம்

கடகம் ராசி அன்பர்களே அக்கம், பக்கம் இருப்பவர்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகள் மூலம் விரயங்கள் ஏற்படும். திடீர் பயணங்களால் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை காணப்படும். எழுத்துத் துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். 

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வாகனப் பயணங்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு மேம்படும். சிக்கனமாகச் செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். கலகலப்பான பேச்சுக்கள் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். 

கன்னி

கன்னி ராசியினரே மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். நவீனத் தொழில்நுட்ப விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சிறு சிறு மாற்றங்களைச் செய்வீர்கள். எதிலும் துரிதத்துடன் செயல்பட்டு முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். 

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி