Today Rasi Palan (03.08.2023): இந்த நாள் எப்படி இருக்கும்?- உங்கள் ராசிக்கான பலன்களை தெரிஞ்சுக்கோங்க..!
Aug 03, 2023, 05:30 AM IST
ஒவ்வொரு ராசிகளுக்குமான இன்றைய (ஆகஸ்ட் 03) பலன்களை இங்கு ஒரே செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான இன்றைய (ஆகஸ்ட் 03) பலன்கள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆடிப்பெருக்கான இன்று சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். கடன்களை தீர்ப்பதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் பக்குவம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
ரிஷபம்
ரிஷப ராசியினருக்கு புதிய வியாபாரம் சார்ந்த அறிமுகம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பயணங்கள் மேம்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
மிதுனம்
அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் காலதாமதம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறும் நாள். ஆரோக்கியம் தொடர்பான சில விரயங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குழப்பங்களால் சில தடுமாற்றங்கள் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். போட்டிகள் நிறைந்த நாள்.
சிம்மம்
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வெளி வட்டாரத்தில் மதிப்பு அதிகரிக்கும். நட்பு நிறைந்த நாள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் பொறுமையுடன் இருக்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிகளில் சாதகமான சூழல் அமையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். ஆதரவு நிறைந்த நாள்.
துலாம்
கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் நிறைவேறாமல் இருந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான செலவுகளை தவிர்ப்பீர்கள். சலனம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
கடன் சார்த்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றமான ஏற்படும் சூழல் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழல் அமையும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
உத்தியோகத்தில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். இழுபறியாக இருந்துவந்த பிரச்னைகள் சுமூகமாக முடியும். உதவிகள் கிடைக்கும் நாள்.
மகரம்
குடும்பத்தினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நிதானமான செயல்பாடுகள் உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். மதிப்பு மேம்படும் நாள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே கவனம் வேண்டும். நண்பர்களின் ஆலோசனைகளால் நன்மை உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
மீனம்
உடனிருப்பவர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பணிபுரியும் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புதிய அறிமுகம் கிடைக்கும். சில பிரச்னைகளுக்கு தெளிவு பிறக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
டாபிக்ஸ்