Thulam: ஜெயித்துக் காட்டுவீர்கள் துலாம் ராசியினரே.. கோபத்தை தள்ளி வச்சுடுங்க.. 2025ல் அதிர்ஷடம் எப்படி இருக்கு பாருங்க!
Sep 07, 2024, 11:46 AM IST
Thulam :உங்கள் திறமையை கண்டு மேலதிகாரிகள் வியக்க வாய்ப்பு உள்ளது. குரு பகவான் பத்தாவது இடத்தில் அமையும் போது எதிர்பார்த்த பதவி உயர்வு 2025 முடிவதற்குள் வந்து சேரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பரபரப்பான எந்த வேலையையும் செய்து முடித்து விடுவீர்கள்.
Thulam : தீவிரமாக யோசித்து எந்த விஷயத்தையும் கச்சிதமாக செய்யும் துலாம் ராசியினரே 2025 ஆம் ஆண்டு நீங்கள் நினைத்த பல காரியங்கள் உங்களுக்கு சாதகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. அனைத்து எதிர்பார்ப்புகளும் பூர்த்தியாகும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. தடுமாறிக் கொண்டிருந்த நீங்கள் இனி சரியான பாதையை தேர்ந்தெடுப்பீர்கள். துலாம் ராசியில் பிறந்த உங்களுக்கு பத்தாவது வீட்டில் குரு பகவான் வருவார். இதனால் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். குடும்பத்தில் நடந்த காலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி சாதகமான முடிவுகள் கிடைக்கும் தள்ளிப்போன திருமணங்கள் நல்ல விதத்தில் முடியும். ஆடம்பர செலவுகளை குறைத்து அத்தியாவசியமான செலவுகளை மட்டுமே இனி செய்தீர்கள். கணவன் மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். பிறக்கும். கடன்களை முடிக்கும் யோகம் வந்து சேரும். 2025 ஆம் ஆண்டு முடிவதற்குள் உங்களுக்கு பல பிரச்சனைகளிலிருந்து தீர்வு கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பிறக்கும் யோகம் உள்ளது.
சமீபத்திய புகைப்படம்
உடல் நலனில் எச்சரிக்கை தேவை
இந்த காலகட்டத்தில் மூட்டு வலி, வயிறு கோளாறு, நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் தொந்தரவு தருவதாக அமையும். ஆனால் பெரிய அளவில் பிரச்சனைகள் வராது. எண்ணெயில் பொரித்த உணவுகளையும் ஹோட்டல் உணவுகளையும் தவிர்க்க வேண்டியது கட்டாயம். வீண் செலவுகளை குரு பகவான் கொடுக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்ப வருமானமும் வந்து சேரும்.
கலக்கம் வேண்டாம்
உத்தியோகத்தில் உறுதியற்ற நிலைகள் இருக்கலாம். ஆனால் உங்களிடம் திறமை இருப்பதால் நீங்கள் கலக்கமடைய மாட்டீர்கள். தாயின் உடல்நிலை சற்று பின்னடைவை சந்திக்கலாம் . ஆனால் பெரிய பாதிப்புகள் இருக்காது. தாய் வழி உறவினர்களால் புறக்கணிக்கப்பட வாய்ப்புள்ளது. வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது. அடிக்கடி செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தொலைதூரப் பயணங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.
ஜெயித்துக் காட்டுவீர்கள்
ராகு பகவானால் சில நன்மைகளும் தீமைகளும் ஒருசேர வந்து சேரும். அவ்வப்போது முன்கோபம் ஏற்படலாம். ஏமாற்றம் வந்து செல்லும். ஆவணி, கார்த்திகை மாதங்களில் உங்களின் புதிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். இழுபறியான பல வேலைகளை அதிரடியாக முடித்து வெற்றி காண்பீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமைய வாய்ப்புள்ளது. வியாபாரத்தில் மற்றவர்களின் அறிவுரையை ஏற்க வேண்டாம். சந்தை நிலவரத்தை அறிந்து தொழிலை மேற்கொள்ளுங்கள். அனுபவம் மிகுந்த புது வேலையாட்களையும் பணியில் அமர்த்த வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் உங்களை குறை கூறியவர்கள் ஒதுங்கி செல்வர் . அவர்கள் முன் ஜெயித்துக் காட்டுவீர்கள்
உங்கள் திறமையை கண்டு மேலதிகாரிகள் வியக்க வாய்ப்பு உள்ளது. குருபகவான் பத்தாவது இடத்தில் அமையும் போது எதிர்பார்த்த பதவி உயர்வு 2025 முடிவதற்குள் வந்து சேரும். சக ஊழியர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பரபரப்பான எந்த வேலையையும் செய்து முடித்து விடுவீர்கள். லக்ஷ்மி நரசிம்மரை வழங்குவது அதிர்ஷ்டத்தை பெற்று தரும். நினைத்த காரியம் கைகூட வாய்ப்புகள் ஏற்படும்.
கடன் பிரச்சனை உங்களை விட்டு விலகும் சிறப்பான காலகட்டம். சின்ன சின்ன அவமானங்கள் வந்தாலும் தடைகளை தகர்த்தெறிந்து உங்கள் பாதையில் முன்னேறிச் செல்வீர்கள். மனைவி வழி உறவினர்களுடன் இருந்தால் பிரச்சனைகள் தீர்ந்து நல்லது நடக்கும். ஆசைப்பட்ட அனைத்தும் வாங்கிக் கொடுக்க இயலும் என்ற தைரியம் உங்களுடைய மனதில் உருவாகும். ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உங்கள் வீடு களைகட்ட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு உயரும் வசதியான வீட்டுக்கு குடிபோகும் வாய்ப்புகள் அதிகமாகும்.
எச்சரிக்கையாக இருங்கள்!
முன்கோபம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சொத்து வாங்குவது விற்பது போன்ற விஷயங்களை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சனி பகவான் ஆசியால் பிரபலங்கள் தொழிலதிபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்ளும் அளவிற்கு நீங்கள் நெருக்கமாக இருங்கலாம். உங்கள் ராசிக்கு ராகு பகவான் ஆறாவது வீட்டில் அமரும்போது நீண்ட காலமாக போகாமல் இருந்த குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவீர்கள். வியாபாரத்தில் புது யுக்தியை புகுத்தி வெற்றியை காண்பீர்கள். புரட்டாசி ஐப்பசி மாதங்களில் நல்லது நடந்தே தீரும் கார்த்திகை மாதத்தில் புதிய ஒப்பந்தங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் ஆர்வம் இல்லாமல் இருந்தவர்களுக்கும் ஆர்வம் வந்து சேரும்.
மேலதிகாரிகள் மிகப்பெரிய அளவில் உதவுவார்கள் மேலதிகாரிகளிடம் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். இழந்த சலுகைகள் தேடி வரும். வெளிநாடு வேலையை விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம் வந்து சேரும் தொல்லைகள் அனைத்தும் நீங்க போகும் அருமையான காலகட்டமாக 2025 அமைய வாய்ப்புள்ளது. யாருக்கும் வாக்கு கொடுப்பதை மட்டும் தவிர்த்து விடுங்கள் எதிரிகள் உங்களைக் கண்டு ஓடி ஒளிய வாய்ப்புகள் உள்ளது 2025 தொட்டது தொடங்கும் அதிர்ஷ்டம் உங்களுக்கு உள்ளது.
இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
ஆன்மீகம் தொடர்பான பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்துஸ்தான் டைம்ஸ் தமிழுடன் இணைந்து இருங்கள்!
டாபிக்ஸ்