Venus Transit: மகர ராசிக்குள் நுழையும் சுக்கிரனால் செழிப்பை பெறப்போகும் மூன்று ராசிகள்
Feb 20, 2024, 10:55 AM IST
சுக்கிரன் வரும் மார்ச் மாதத்தில் கும்ப ராசிக்கு இடமாற்றம் செய்வதால், மூன்று ராசிகள் அதிர்ஷ்ட மழையில் நனைய போகிறது.
சுக்கிர பகவான் நவகிரகங்களில் சொகுசு நாயகனாக விளங்குகிறார். அசுரர்களின் குருவாக திகழ்ந்து வரும் சுக்கிர பகவான் மாதம் ஒரு முறை தனது இடத்தை மாற்ற கூடியவர். இவருடைய இடமாற்றம் நிகழும் ராசிகளில் பல்வேறு நேர்மறையான தாக்கம் உண்டாகும்
சமீபத்திய புகைப்படம்
கடந்த 12ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்த சுக்கிரன், அடுத்து மார்ச் 7ஆம் கும்ப ராசிக்கு செல்கிறார். இதன் காரணமாக எந்தெந்த ராசிகளுக்கு நல்ல பலனை தருகிறது என்பதை பார்க்கலாம்.
சுக்கிரன் ஆடம்பரம், செழிப்பு, செல்வம் உள்ளிட்டவைகளை அள்ளி வழங்குபவராக இருந்து வரும் நிலையில், கும்ப ராசியின் இடபெயர்வு காரணமாக மேஷம், தனுசு, கும்பம் ராசியில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட இருக்கின்றன.
மேஷம்: சுக்கிர பகவானின் நட்சத்திர இடமாற்றம் இந்த ராசியினருக்கு சிறந்த பலன்களை கொடுக்கப் போகிறது. நிதி நிலைமையில் நல்ல .முன்னேற்றம் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்
தனுசு: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பணவரவை அதிகப்படுத்த போகிறது. வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாள் சிக்கல்கள் முடிவுக்கு வரும் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளால் நல்ல செய்தி தேடி வரும். வீட்டு வசதிகள் அதிகரிக்க கூடிய சூழ்நிலை உண்டாகும்.
கும்பம்: சுக்கிரனின் நட்சத்திர இடமாற்றம் உங்களுக்கு பல்வேறு விதமான புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தரும். ஆன்மிகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும்.
பொறுப்புத்துறப்பு: இந்த கட்டுரைக்கும் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களுக்கும் கட்டுரையாளரே பொறுப்பாவார். இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இந்தக் கட்டுரையில் இடம்பெறும் தகவல்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பாகாது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்