Thisai Palangal: ’மேஷம் முதல் கன்னி வரை!’ வாழ்கையில் ஏற்றிவிடும் கிரகம் எது? கீழே தள்ளிவிடும் கிரகம் எது?
Sep 11, 2024, 09:29 PM IST
Thisai Palangal: பொதுவாக திரிகோணாதிபதிகள் எப்போதும் நன்மை செய்ய கடமைப்பட்டவர்கள். உதாரணமாக மேஷம் லக்னத்தில் 1, 5, 9-க்கு உடைய செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்கள் கட்டாயம் நன்மைகள் தரக்கூடியது.
மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிகளுக்கு திசைகள் தரும் நன்மை தீமைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
பொதுவாக திரிகோணாதிபதிகள் எப்போதும் நன்மை செய்ய கடமைப்பட்டவர்கள். உதாரணமாக மேஷம் லக்னத்தில் 1, 5, 9-க்கு உடைய செவ்வாய், சூரியன், குரு ஆகிய கிரகங்கள் கட்டாயம் நன்மைகள் தரக்கூடியது.
சமீபத்திய புகைப்படம்
மேஷம்
மேஷ லக்னத்திற்கு சூரியன், செவ்வாய், குரு ஆகிய கிரகங்கள் முதன்மையான நன்மை தரக்கூடியவர்கள். நான்காம் அதிபதியாக வரக்கூடிய சந்திரனும் லக்ன சுபர் என்ற அடிப்படையில ஜாதகருக்கு நன்மைகளை தருவார்.
ரிஷபம்
ரிஷப லக்ன திரிகோணாதிகள் ஆன சுக்கிரன் புதன் மற்றும் சனி இவர்கள் மூவரும் நன்மைகள் மட்டுமே செய்யக்கூடியவர்கள் ஆவார். இதில் லக்னாதிபதியான சுக்கிரன் லக்னாதிபதியான சுக்கிரன் ஆனவர் ஆறாம் அதிபதியாகவும் உள்ளதால் சுக்கிர திசை நடக்கும் போது 6ஆம் இடத்திற்கு உரிய வேலையும் சேர்ந்து செய்யும். இதனால் ஆறாம் இடம் தரக்கூடிய கடன், நோய், எதிரி, வம்பு, வழக்கு சிறு அளவுல இருக்கும். புதன் பகவான் மூலம் ராஜயோகம் உண்டாகும். சூரிய திசை இவர்களுக்கு நன்மைகளையே செய்யும்.
மிதுனம்
மிதுன லக்ன ஜாதகர்களுக்கு சனி, சுக்கிரன், புதன் நன்மைகள் செய்ய கடமைப்பட்டவர்கள் ஆவர். ஆனாலும், மிதுன லக்னம் உபய லக்னமாக உள்ளதால் புதன் திசையிலேயே கேந்திராதிபத்தியமும் வேலை செய்யும். சுபர்கள் திசை நடக்கும் போது கூட சில நெருடலான பலன்களை சந்திக்க வேண்டி வரும். சந்திர திசை நடக்கும்போது பொருளாதார வெற்றி பெறுவீர்கள். சூரிய திசையில் எதிர்மறை பலன்கள் நடைபெறுவது இல்லை. மேலும் நடுத்தர வயதுள்ள மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு திசை நல்ல பலன்களை தரும்.
கடகம்
கடக லக்ன ஜாதகர்களுக்கு சந்திரன், செவ்வாய், குரு ஆகிய தசைகள் நன்மைகளை செய்யும். இதில் குருபகவானுக்கு ஆறாம் அதிபத்தியமும் உள்ளதால் சற்று எதிர்மறை பலன்கள் கிடைக்கும். இவர்களுக்கு சூரிய மகா திசையும் ராஜயோக பலன்களை தரும்.
சிம்மம்
சிம்ம லக்னத்திற்கு சூரியன், செவ்வாய், குரு ஆகியோரின் திசைகள் அதிக நன்மைகளை தரக்கூடியது. செவ்வாய் பாதகாதி என்பதால் ஒரு சில எதிர்மறை பலன்களும் கிடைக்கும். குரு அட்டமாதிபதி என்பதால் குரு திசையில் சில எதிர்மறை பலன்கள் இருந்தாலும் பெரும்பாலும் நற்பலன்களையே அனுபவிப்பீர்கள். சந்திரன் சுபர் என்றாலும் 12ஆம் வீட்டின் அதிபதி என்பதால் சுப விரையங்கள் உடன் கூடிய கலப்பு பலன்களை தருவார்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு புதன் லக்னாதிபதியாகி கேந்திராதிபத்தியம் பெறுவதால் சில எதிர்மறை பலன்கள் கிடைக்கும். சுக்கிரன் முழு சுபர் என்பதால் சுக்கிர திசை நல்ல பலன்களை தரும். ஆனால் சனி திசை ஆனது கலப்பு பலன்களை தரும். ஆனால் சந்திர திசை இவர்களுக்கு எப்போதும் நன்மைகள் தரக்கூடிய திசையாக இருக்கும். மேலும் பாவிகளின் தன்மையின் அடிப்படையில கேது மகா திசை கன்னி லக்னத்துக்கு பெரும் கெடுதல்கள் செய்வது கிடையாது.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.