கண்திருஷ்டி: குழந்தைகள் மீது படாமல் பார்த்துக் கொள்வது எப்படி?
May 10, 2022, 01:37 AM IST
குழந்தைகள் மீது கண் திருஷ்டி படாமல் இருக்க இதனைச் செய்ய வேண்டும்.
மனிதனின் கண்கள் விளக்கு போன்றது, அதனால் மற்றவர்களை எரிக்கக் கூடிய பலம் அதற்கு அதிகமாக உள்ளது. மனிதனின் உடலில், கண்கள்தான் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்துகிறது.
சமீபத்திய புகைப்படம்
நமது முன்னேற்றத்தில் பொறாமை கொள்ளும் சிலர் வன்மப் பார்வையோடு பார்க்கும்போது, நமது எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டு செயல்கள் சீர்குலைய வாய்ப்பு உள்ளது.
ஒருவரின் பார்வையால் ஏற்படுகின்ற தீய செயல்பாடுகளை கண்திருஷ்டி எனக் கூறப்படுகிறது. மனிதனின் வாழ்க்கை கடவுளால் எழுதப்பட்டதாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் சில மாற்றங்கள் மனிதனின் செயல்களால் நிகழ்கின்றன. நல்ல எண்ணத்தோடு அணுகும் எந்த செயல்களும் ஒளிவிட்டு மலரும், தீய எண்ணத்தோடு பார்க்கும் சிறு பார்வை கூட மற்றவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப்போடும்.
இவ்வாறு கண் திருஷ்டிக்கு அவ்வளவு பெரிய பலம் உண்டு, குழந்தைகளை அன்போடு பார்க்கும் பார்வை என்பது வேறு, ஏக்கத்தினாலும் கிடைக்காத வருத்தத்தினாலும் அன்போடு பார்ப்பதுபோல் குழந்தைகள் மீது சிலர் கண் வைப்பார்கள்.
அந்த திருஷ்டி பட்டால் குழந்தைகளைத் தீமையான நிலைமைகளுக்குக் கொண்டு செல்லும். எனவே அந்தந்த நேரத்தில் குழந்தைகளுக்குத் திருஷ்டி கழிப்பது நல்லது.
குழந்தைகளைப் பார்க்கும் அனைவரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருக்காது. இதுபோன்ற தீய செயல்களை உருவாக்கும் திருஷ்டியை சில செயல்கள் கொண்டு நிவர்த்தி செய்யலாம்.
குழந்தைகளை அழகுபடுத்தும் பொழுது நெற்றியிலும் கன்னத்திலும் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கவேண்டும். நெற்றியில் வைக்கும் பொட்டை சற்று அலங்கோலமாகக் கலைக்க வேண்டும்.
குழந்தைகளின் அழகான முகத்தை மற்றவர்கள் பார்க்கும் போது, இது போன்ற வித்தியாசமான ஒன்றைக் கண்டால் அவர்களின் எண்ணம் மாறும். அதனால் கண்திருஷ்டி ஏற்படாது எனக் கூறப்படுகிறது.