Famous Temples : ‘கடன் தீர, குழந்தை பேறு அளிக்க, திருமணத் தடை நீங்க’ நீங்கள் செல்ல வேண்டியது இந்த கோயில்கள்தான்!
Jun 11, 2023, 11:06 AM IST
Famous Temples : வாழ்வில் அனைத்து பிரச்னைகளுக்கும் ஒரு தீர்வு உண்டு. தொடர்ந்து பிரச்னைகளை சந்தித்து வரும் நீங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளில் இருந்தெல்லாம் விடுபட வேண்டுமெனில் அதற்கு செல்ல வேண்டிய பரிகார கோயில்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அவற்றை தெரிந்துகொண்டு அந்த கோயில்களுக்கெல்லாம் சென்று உங்கள் பிரச்னைகளை குறைத்துக்கொள்ளுங்கள்.
சமீபத்திய புகைப்படம்
கடன் பிரச்சனைகள் தீர்க்கும் பரிகார கோயில்கள் -
1. அன்னமலை தண்டாயுதபாணி கோயில், மஞ்சூர்-ஊட்டி.
2. கருமாரியம்மன் கோயில், திருவேற்காடு.
3. சாரபரமேஸ்வரர் கோயில், திருச்சேறை, கும்பகோணம்.
4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி.
5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோயில், திருமலை.
கல்வி வளம் பெருக அருளும் பரிகார கோயில்கள்:
1. கரிவரதராஜ பெருமாள் கோயில், மாதவரம்.
2. தேவநாதசுவாமி கோயில், திருவஹிந்தீபுரம், கடலூர்.
3. மகாசரஸ்வதி அம்மன், கூத்தனூர், பூந்தோட்டம்.
4. வரதராஜ பெருமாள் கோயில், செட்டிபுண்ணியம்.
குழந்தைப்பேறு அருளும் பரிகார கோயில்கள் -
1. ஏகம்பரநாதர் கோயில், காஞ்சிபுரம்.
2. சங்கரராமேஸ்வரர் கோயில், தூத்துக்குடி.
3. சிவசுப்ரமண்யசுவாமி கோயில், குமாரசாமிபேட்டை, தர்மபுரி.
4. தாயுமானசுவாமி கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
5. பாலசுப்ரமணியசுவாமி கோயில், ஆயக்குடி-தென்காசி.
6. மயூரநாதசுவாமி கோயில், பெத்தவநல்லூர்-ராஜபாளையம்.
7. முல்லைவனநாத சுவாமி கோயில், திருக்கருகாவூர்.
8. நச்சாடை தவிர்தருளியசுவாமி கோயில், தேவதானம், ராஜபாளையம்.
9. விஜயராகவ பெருமாள் கோயில், திருபுட்குழி.
குடும்பத்தில் ஒற்றுமை அருளும் பரிகார கோயில்கள் -
1. அகத்தீஸ்வரர் கோயில், வில்லிவாக்கம் - சென்னை.
2. அர்த்தநாரீஸ்வரர் கோயில், திருச்செங்கோடு.
3. அங்காளம்மன் கோயில், முத்தனம்பாளையம் - திருப்பூர்
4. கல்யாணவிகிர்தீஸ்வரர் கோயில், வெஞ்சமாங்கூடலூர்.
5. சங்கரநாராயணசுவாமி கோயில், சங்கரன்கோவில்.
6. நவநீதசுவாமி கோயில், சிக்கல்.
7. பள்ளிக்கொண்டீஸ்வரர் கோயில், ஊத்துக்கோட்டை - சுருட்டப்பள்ளி.
8. மனிஹடா ஹெத்தையம்மன் நாகராஜா கோயில், மஞ்சக்கம்பை.
9. மாரியம்மன், காளியம்மன் கோயில், ஊட்டி.
10. லட்சுமி நரசிம்மர் கோயில், பரிக்கல்.
11. வெக்காளியம்மன் கோயில், உறையூர் – திருச்சி.
12. ஸ்தலசயனப்பெருமாள் கோயில், மாமல்லபுரம்.
செல்வ வளம் அருளும் பரிகார கோயில்கள் -
1. அனந்தபத்மநாப சுவாமி கோயில், அடையார் – சென்னை.
2. அஷ்டலட்சுமி கோயில், பெசன்ட் நகர் - சென்னை.
3. கைலாசநாதர் கோயில், தாரமங்கலம்.
4. பக்தவச்சலப்பெருமாள் கோயில், திருநின்றவூர்.
5. மாதவப்பெருமாள் கோயில், மயிலாப்பூர்.
திருமணத் தடைகள் நீக்கும் பரிகார கோயில்கள் -
1. உத்வாகநாதசுவாமி கோயில், திருமணஞ்சேரி.
2. கல்யாணபசுபதீஸ்வரர் கோயில், கரூர்.
3. கல்யாண வேங்கடரமண சுவாமி கோயில், தான்தோன்றிமலை.
4. கைலாசநாதர் கோயில், தாரமங்கலம்.
5. சென்னமல்லீஸ்வரர், சென்னகேசவபெருமாள் கோயில், பாரிமுனை.
6. பட்டீஸ்வரர் கோயில், பேரூர். கோவை.
7. நித்யகல்யாண பெருமாள் கோயில், திருவிடந்தை.
8. வரதராஜ பெருமாள் கோயில், நல்லாத்தூர்.
9. வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமழலை.
தீவினைகள் அகன்றிட அருளும் பரிகார கோயில்கள்:
1. காலபைரவர் கோயில், குண்டடம்.
2. காளிகாம்பாள் கோயில், தம்புசெட்டி தெரு, சென்னை.
3. குறுங்காலீஸ்வரர் கோயில், கோயம்பேடு.
4. சரபேஸ்வரர் கோயில், திருபுவனம்.
5. சிங்காரத்தோப்பு முனீஸ்வரர் கோயில், நடுப்பட்டி, மொரப்பூர்.
6. பண்ணாரி மாரியம்மன் கோயில், பண்ணாரி.
நிலம், வீடு, மனை அமைந்து, சங்கடங்கள் தீர அருளும் பரிகார கோயில்கள் -
1. அக்னீஸ்வரர் கோயில், திருப்புகலூர்.
2. தீர்த்தகிரீஸ்வரர் கோயில், தீர்த்தமலை, அரூர்.
3. பூவராகசுவாமி கோயில், ஸ்ரீமுஷ்ணம்.
4. வராகீஸ்வரர் கோயில், தாமல், காஞ்சிபுரம்.
நோய், நொடிகள் தீர்க்கும் பரிகார கோயில்கள்:
1. இருதயாலீஸ்வரர் கோயில், திருநின்றவூர்.
2. தோரணமலை முருகன் கோயில், தோரணமலை.
3. பண்ணாரிமாரியம்மன் கோயில், பண்ணாரி.
4. மருந்தீஸ்வரர் கோயில், திருவான்மியூர்.
5. வீர்ராகவர் கோயில், திருவள்ளூர்.
6. வீழிநாதேஸ்வரர் கோயில், திருவீழிமழலை.
7. வைத்தியநாதசுவாமி கோயில், மடவார் விளாகம். ஸ்ரீவில்லிப்புத்தூர்.
பெண்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு அருளும் பரிகார கோயில்கள் -
1. தாயுமானசுவாமி கோயில், மலைக்கோட்டை, திருச்சி.
2. பாதாள பொன்னியம்மன் கோயில், கீழ்ப்பாக்கம், சென்னை.
3. மகாதேவர் கோயில், செங்கனூர்-கேரளா.
முன்னோர் வழிபாட்டிற்கு உகந்த பரிகார கோயில்கள் -
1. சங்கமேஸ்வரர் கோயில், பவானி.
2. மகுடேஸ்வரர் கோயில், கொடுமுடி.
3. வரமூர்த்தீஸ்வரர் கோயில், அரன்வாயல் - கவரப்பேட்டை.
4. வீரராகவர் கோயில், திருவள்ளூர்.
5. ராமநாதசுவாமி கோயில், ராமேஸ்வரம்.
6. திருப்பள்ளி முக்கூடல் குருவிராமேஸ்வரம் கோயில், திருவாரூர்.
7. காசி விஸ்வநாதர், காசி.
8. பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.
9. சொரிமுத்து அய்யனார் கோயில், பாபநாசம், திருநெல்வேலி மாவட்டம்.
டாபிக்ஸ்