தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  அடுத்தடுத்து சூரியனும் சனியும்.. உருவான நவபஞ்சம யோகம்.. அடி தூளாக வெல்லும் 3 ராசிகள்

அடுத்தடுத்து சூரியனும் சனியும்.. உருவான நவபஞ்சம யோகம்.. அடி தூளாக வெல்லும் 3 ராசிகள்

Marimuthu M HT Tamil

Oct 19, 2024, 07:13 PM IST

google News
அடுத்தடுத்து சூரியனும் சனியும்.. உருவான நவபஞ்சம யோகம்.. அடி தூளாக வெல்லும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.
அடுத்தடுத்து சூரியனும் சனியும்.. உருவான நவபஞ்சம யோகம்.. அடி தூளாக வெல்லும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

அடுத்தடுத்து சூரியனும் சனியும்.. உருவான நவபஞ்சம யோகம்.. அடி தூளாக வெல்லும் 3 ராசிகள் குறித்துக் காண்போம்.

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் ராஜா, சூரிய பகவான் ஆவார். ஒரு வருடத்தில் 12 முறை அதாவது மாதத்திற்கு ஒரு முறை சூரியன் தனது ராசியை பெயர்ச்சி செய்துகொள்கின்றன. இந்த சூரியப் பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலிக்கிறது.

சமீபத்திய புகைப்படம்

'நடப்பது நடக்கட்டும்.. இலக்கில் கவனம்.. எச்சரிக்கை.. திசை மாறினால் தினம் வீணாகும்' மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்!

Nov 25, 2024 05:00 AM

துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினரே.. இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:40 PM

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி ராசியினரே இந்த வாரம் உங்கள் காதல் வாழ்க்கை எப்படி இருக்கும் பாருங்க!

Nov 24, 2024 04:19 PM

இன்னும் 4 நாள்தான்.. கூரைய பிச்சுக்கிட்டு கொட்டுவார் குரு பகவான்.. மேஷம், துலாம், கும்ப ராசியினரே ஜாக்பாட் அடிக்கும்!

Nov 24, 2024 01:22 PM

மேஷம், துலாம், கும்ப ராசியினரே தொட்டதெல்லாம் வெற்றிதான்.. ஷடாஷ்டக யோகம் கொட்டிக் கொடுக்கும்.. எல்லாம் நன்மைக்கே!

Nov 24, 2024 12:31 PM

கோடிகளாய் கொட்டும் குரு.. பணம் மூட்டையை தூக்கி வீசும் சுக்கிரன்.. இந்த ராசிகள் இனி சிக்க மாட்டார்கள்

Nov 24, 2024 06:00 AM

கடந்த அக்டோபர் 17 அன்று , துலாம் ராசிக்குள் நுழைந்த சூரியப் பெயர்ச்சி, மற்றும் அடுத்த இடத்தில் இருக்கும் சனி பகவான் ஆகியவற்றின் தாக்கத்தால், இரண்டு கிரகங்களும் இணைந்து ‘நவ பஞ்சம யோகம்’ உண்டாகிறது.

இந்த சூரியப் பெயர்ச்சியால் அடுத்த மாதம் வரை, நவபஞ்சம யோகம் நீடிக்கிறது. இந்த நவபஞ்சம யோகத்தால் அதிக நற்பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்துக் காண்போம்.

நவ பஞ்சம யோகத்தால் அதிர்ஷ்டத்தை வசூல் செய்யப்போகும் ராசிகள்:

மேஷம்:

நவ பஞ்சம யோகத்தால் மேஷ ராசியில் ஜெனித்தவர்களுக்கு, அடுத்த இரண்டு மாதங்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கப்போகின்றன. இந்த தருணத்தில் மேஷ ராசியினர் எடுக்கும் அனைத்து முன்னெடுப்புகளும் லாபகரமாக இருக்கும். பணப்பிரச்னைகள், கடன் தொல்லைகள் ஆகியவைக் குறைந்து நல்ல பலன்களைப் பெறுவீர்கள். பணியிடத்தில் இருந்த ஒத்துழைப்பு அதிகரிக்கும். அலுவலக அரசியல் குறையும்.

தொழிலில் உங்கள் யுக்தியால் மிதமிஞ்சிய லாபத்தைப் பெறுவீர்கள். சைடு பிஸினஸ் செய்யும் வாய்ப்புகள் கிடைக்கும். சரியாகத் திட்டமிட்டு பிசினஸ் செய்தால் சரியான லாபம் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

ரிஷபம்:

நவ பஞ்சம யோகத்தால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு, நற்பலன்கள் அதிகம் கிடைக்கும். இந்தக் காலத்தில் கெட்டது விலகி ரிஷப ராசியினருக்கு தொட்டது துலங்கும். உங்களது எதிரிகளின் தொல்லை இந்தக் காலத்தில் குறையும். உங்கள் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் ஊக்கத்தொகையாக வந்துசேரும்.

ரிஷப ராசியினரின் ஆளுமைப் பண்பின் காரணமாக, அதிகளவிலான பணிகள் கிடைக்கும். கணவன் - மனைவி இடையே இருந்த பிரச்னைகள் நீங்கி சுமுகமாக இருக்கும். கடன் பிரச்னைகள் நீங்கும். வெகுநாட்களாக வாங்க நினைத்தப் பொருட்களை வாங்குவீர்கள். ரிஷப ராசியினரின் வாழ்க்கையில் அமைதியும் நிம்மதியும் நிலவும்.

துலாம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு நவ பஞ்சம யோகத்தால் அற்புதமான பலன்கள் கிடைக்கும். துலாம் ராசியில் நுழைந்த சூரியனால், மனக்குழப்பங்கள் மறைந்து பணிகளில் உத்வேகம் பிறக்கும். இதனால் தொழில் முனைவோர், வாழ்வில் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். எடுத்த ஆர்டர்களை சொன்ன தேதியில் வாடிக்கையாளரிடம் ஒப்படைப்பார்கள். துலாம் ராசியினர் தங்களது ஒவ்வொரு பணிகளிலும் மன நிறைவினைப் பெறுவார்கள். உடல்நலனில் அக்கறை அதிகரிக்கும். அயல் மாநிலம் மற்றும் அயல் நாட்டுக்குச் சென்று பொருளாதாரத்தை துலாம் ராசியினர் ஈட்டலாம்.

பொறுப்பு துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி