HT Yatra: புது ரூபத்தில் சிவபெருமான்.. சாந்தியடைந்த நரசிம்மர்.. காட்சியளித்த கம்பஹரேஸ்வர்
Aug 03, 2024, 06:30 AM IST
HT Yatra: திருப்புவன வீரபுரம், திருப்புரவனம் என்று வேறு பெயர்களால் அழைக்கப்படக் கூடிய இந்த அற்புதமான ஸ்தலம் திருபுவனம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இருக்கிறது இந்த திருபுவனம். இந்த ஊரில் இருக்கும் சிறப்பு மிகுந்த கோயில் தான் ஸ்ரீ கம்பஹரேஸ்வர் கோயில்.
HT Yatra: திருப்புவன வீரபுரம், திருப்புரவனம் என்று வேறு பெயர்களால் அழைக்கப்படக் கூடிய இந்த அற்புதமான ஸ்தலம் திருபுவனம். தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே இருக்கிறது இந்த திருபுவனம். இந்த ஊரில் இருக்கும் சிறப்பு மிகுந்த கோயில் தான் ஸ்ரீ கம்பஹரேஸ்வர் கோயில்.
சமீபத்திய புகைப்படம்
கம்பீரமாக எழுந்து நிற்கும் 160 அடி உயர ஏழு நிலை ராஜகோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் பெரிய பரப்பில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். இங்கே தல விருட்சமாக விளங்குவது வில்வம். சிவனுக்கு உகந்த அற்புதமான பவித்திரம் இந்த வில்வம்.
இங்கே தீர்த்தமாக சரவ தீர்த்தம் மிகவும் பிரசித்தி பெற்றாலும் வேறு பல தீர்த்தங்களும் இங்கு உள்ளது. தேவ தீர்த்தம், ஞான தீர்த்தம், வியாச தீர்த்தம், திருஹ தீர்த்தம், சித்த தீர்த்தம் என்று பலவகையான தீர்த்தங்கள் இத்தளத்தை மேலும் புனிதப் படுத்துகிறது. கவசம் போலப் பறக்கின்ற கொடி மரம், பலிபீடம் நந்தி ஆகியவற்றைக் கடந்து உள்ளே சென்றால் அகன்ற பிரகாரம் உள்ளது.
கருவறை மீதான விமானம் தஞ்சை ஸ்ரீ பிரகதீஸ்வரர் ஆலயத்தின் விமானத்தை அமைப்பையே ஒத்திருக்கிறது. ராஜகோபுரத்தை விட உயரமான அமைப்பு இது. அடித்தளத்திலிருந்து உச்சிவரை கருங்கல்லால் ஆன திருப்பணி. எப்படி ஒருங்கிணைத்தார் என்று வியக்கின்ற வண்ணம் கலைவடிவம் கொண்டுள்ளது.
இக்கோயிலில் பல சன்னதிகள் உள்ளன. வினை அனைத்தையும் போக்கும் விநாயகர் சன்னதி, தெளிந்த அறிவும், கேள்வி ஞானமும் தரும் தக்ஷிணாமூர்த்தி, வெற்றிகளால் வாழ்வை வளமாக்கும் விஷ்ணு துர்க்கை இப்படிப் பல சன்னதிகள் இங்கு உள்ளது.
நீண்டு விரிந்து கிடக்கும் பிரகாரத்தின் நடுவில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீ கம்பகேஸ்வரர். இவருக்கு நடுக்கம் தீர்த்த பெருமான் என்று பெயர் உள்ளது. என்ன நடக்கும் அந்த நடுக்கம் இதற்கு எல்லாவற்றிற்கும் விடை கூறுகிறது இத்தல புராணம்.
தல வரலாறு
நரசிம்ம மூர்த்தி இரணியனை வதைத்தார். இரணியனை வதம் செய்த அவருடைய கோபம் குறையவில்லை. அவருடைய கோபம் குறைவதற்கு என்ன வழி. முப்பத்து முக்கோடி தேவர்களும் திகைத்து நின்றனர். யாரிடம் செல்வது? யாரிடம் போனால் இந்த நடுக்கம் தீரும் என்று எண்ணிய தேவர்கள் சிவபெருமானை உள்ளம் உருகி வழிபட்டனர்.
சிவபெருமான் பெருமாள் எந்த ரூபத்தில் இருக்கிறாரோ அவருடைய கோபத்தைத் தணிப்பதற்காக தானும் ஒரு புதிய ரூபத்தை மேற்கொண்டார். மூன்று உருவங்களின் வடிவமாக இருக்கின்ற அந்த நரசிம்ம மூர்த்தியின் கோபத்தைத் தணிக்க சரபேஸ்வரராக இறைவன் மாறினார்.
இவரும் மூன்று உருவங்களின் அமைப்பை தனக்கு உள்ளே கொண்டிருந்தார். பயந்துபோன உலகத்தின் நடுக்கத்தைப் போக்கச் சிவபெருமான் வந்ததால் அவருக்கு நடுக்கம் தீர்த்த பெருமான் என்கின்ற பெயர் வந்தது. ஒன்றும் கிடைத்ததா வந்தவர் எப்படி இந்த நடுக்கத்தை
அந்த கோலம் பறவை, விலங்கு, மனிதன் என்ற மூன்றும் ஒன்றாகக் கலந்த கூட்டணியோடு வந்த சிவபெருமான், இதுவரை யாரும் அறிந்திராத வகையில் தெய்வீக தன்மைக்கே உரியச் சூட்சம ரூபத்தோடு காட்சி தந்தார். எது தேவையோ, எப்போது தேவையோ அப்போது தான் அது வெளிப்படும். அதற்கான காரணம் முடிந்த உடன் தன்னை மறைத்துக் கொள்ளும் இதுவே தெய்வீகத்தின் சூட்சமம்.
சரபேஸ்வரராக வந்த சிவபெருமான் அவருடைய சிறகுகளில் சூலினி துர்க்கையையும், பிரத்தியங்கரா தேவியையும் ஏற்று அருள் புரிந்தார். ஆவேசமாய் ஆர்ப்பரித்த நரசிம்மர் பற்றினார். கோபம் தணிந்து சாந்தமாக இருப்பீர் என்று சொல்லி அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.
அதன்பிறகு நரசிம்மரின் ஆவேசம் அடங்கியது. பின்னர் தேவர்கள் இருவரையும் பூ மழை பொழிந்து வழிபட்டனர். தமிழகத்தில் சரபேஸ்வரருக்கு அமைந்த முதல் சன்னதி இது தான்.
பயம், துக்கம், தடை என்ற கவலை எதுவானாலும் அவற்றை போக்குபவர் இந்த சரபேஸ்வரர். ராகுகாலத்தில் சரபேஸ்வரரை வழிபடுவது மிகவும் சிறப்பானது. மேலும் சில கிழமைகள் இவருக்கு விசேஷமாகச் சொல்லப்படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் சரபேஸ்வரை வழிபட்டால் செல்வம் வந்து சேரும், குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும், வறுமையை விரட்டும், வருமானத்தைப் பெருக்கும், மங்கல நிகழ்வுகளில் வீட்டில் வாரி வாரி வழங்கும்.
செவ்வாய்க்கிழமை அன்று இவரை வழிபட்டால் கடன் போகும் நிலம் வீடு தொடர்பான பிரச்சனைகள் விலகும். ஞாயிற்றுக்கிழமை இவரை வழிபட்டால், பிறரால் உண்டாகக்கூடிய துன்பங்கள் கிரக தோஷங்கள் ஆகியவை நீங்கி இன்று பலரும் பயந்து கொண்டிருக்கிற பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இது போன்ற அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
Google News: https://bit.ly/3onGqm9