Temple Luck: சுவாதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய முக்கியமான ஆலயம்.. மலைக்க வைக்கும் மதுவனேஷ்வரர்!
Sep 20, 2023, 11:37 AM IST
யாரால்லாம் நரம்பு பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறீர்களோ இந்தக்கோயிலுக்கு சென்று வரும் போது உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.இங்கு சென்று பஞ்சுத்திரி போட்டு 10 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற பகுதியில் மதுவனேஷ்வரர் கோயில் இருக்கிறது. இதனை மதுவனபெருங்கோயில் என்று கூட சொல்வார்கள். இங்கு பல கோயில்களில் இருப்பது போல சூரியன் மற்ற நவகிரகங்களை பார்த்து இருக்கிறது.
சமீபத்திய புகைப்படம்
இந்தப்பகுதியை நன்னிலம் என்று அழைப்பதற்கான காரணம் இங்கு நிறைய விவசாய பூமி இருக்கிறது. இந்தக்கோயிலில் அகஸ்தியர், பிரம்மன் ஆகியோரல்லாம் வழிபாடு செய்து இருக்கிறார்கள். இந்தக்கோயிலில் தீர்த்தங்கள் மிகவும் பிரபலம்.
கங்கைத்தீர்த்ததிற்கு இணையான தீர்த்தம் இங்கு கிடைக்கும். அதை தலையில் தெளித்துக்கொண்டாலே 23 தலைமுறை தோஷங்களெல்லாம் தூள், தூளாகி போய் விடும்.
ரிஷிக்கள் தேனீக்களாக மாறி இங்கு வழிபாடு செய்ததாக ஒரு வரலாறு உண்டு. தேனீ என்றாலே சுவாதி நட்சத்திரத்தை குறிக்கும். ஆகையால் சுவாதி நட்சத்திரம் உடையவர்கள் சுவாதி நட்சத்திரம் வரும் அன்றைய தினம் இந்தக்கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சாலச் சிறந்தது.
பணம்சேமிக்க முடியாமை, பணநெருக்கடியால் அவதிப்படுபவர்களாயின், இந்தகோயிலுக்குச் செல்வது நலம். இந்தக்கோயிலுக்கு சென்று வந்தால் சேமிப்பு உருவாகும்.
உங்கள் ஜாதகத்தில் 2 ம் அதிபதிக்கு உரித்தான கிழமைகளில் இந்தக்கோயிலுக்கு நீங்கள் செல்வது சிறப்பான பலன்களைக் கொடுக்கும், அல்லது உங்களது இரண்டாவது நட்சத்திரம் வரும் கிழமையில் சென்று வழிபாடு செய்யுங்கள். யாரால்லாம் நரம்பு பிரச்சினைகளால் கஷ்டப்படுகிறீர்களோ இந்தக்கோயிலுக்கு சென்று வரும் போது உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.இங்கு சென்று பஞ்சுத்திரி போட்டு 10 விளக்குகள் ஏற்றி வழிபாடு செய்யுங்கள்.
நன்றி: அவிநாசி ஜோதிலிங்கம்!
டாபிக்ஸ்