Aadi Sunday: ஆடி ஞாயிறு சிறப்பு தெரியுமா? - கன்னி தெய்வ வழிபாடு மிகவும் அவசியம்!
Jul 23, 2023, 01:55 PM IST
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை கன்னி தெய்வ வழிபாட்டுக்கு உரிய நாளாகும்.
ஆடி ஞாயிறு சிறப்பு தெரியுமா? - கன்னி தெய்வ வழிபாடு மிகவும் அவசியம்!
சமீபத்திய புகைப்படம்
ஆடி மாதம், ஞாயிற்றுக்கிழமை, ஆடி ஞாயிறு, ஆன்மீகம், ஜோதிடம்
ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை கன்னி தெய்வ வழிபாட்டுக்கு உரிய நாளாகும்.
தமிழ் மாதத்தில் இருக்கக்கூடிய ஒவ்வொரு மாதமும் இறைவனின் மாதமாகக் கருதப்படுகிறது. அப்படி மிகவும் சிறப்புக்குரிய மாதமாக விளங்கக்கூடிய ஆடி மாதம் அம்மனுக்கு உரிய மாதமாகத் திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடி மாதம் என்றாலே நம் நினைவுக்கு வருவது வேப்பிலை மற்றும் கூழ் ஊற்றுவது தான். கூழ் காய்ச்சி ஏழை எளிய மக்களுக்கு ஊற்றுவது ஆடி மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் செய்யப்படும்.
அனைத்து அம்மன் கோயில்களிலும் ஆடி மாதங்களில் வரக்கூடிய அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் கூழ் ஊற்றப்படும். இந்த திருவிழா அனைத்து கோயில்களிலும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
தானம்
ஆடி மாதம் வரக்கூடிய ஞாயிற்றுக்கிழமைகளில் தானம் செய்தால் பல கோடி புண்ணியம் கிடைக்கும் என ஆன்மீகம் கூறுகிறது. அதனால்தான் இந்த நாட்களில் கூழ் காய்ச்சி ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த நாளில் முருங்கைக் கீரை, காராமணி, வாழைக்காய், கருவாடு, கத்தரிக்காய், மொச்சை, கேழ்வரகு, மாவிளக்கு, கொழுக்கட்டை உள்ளிட்ட பதார்த்தங்களைத் தயாரித்து அம்மனுக்கு நைவேத்தியம் செய்து படைக்கப்படுகிறது.
படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் மக்களுக்குத் தானமாகக் கொடுக்கப்படுகிறது. இந்த பழக்கம் தொன்று தொட்டுப் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக இதில் முக்கிய விசேஷம் என்னவென்றால் தானம் வாங்குபவர்களுக்கும் அந்த புண்ணியம் கிடைக்கும் என்பது தான்.
அனைத்து கடவுள்களுக்கும் மிகவும் பிடித்த விஷயம் அன்னதானம். பல பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமையில் அன்னதானம் செய்தால் நம் வாழ்நாளில் செய்த அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.
ஆடி ஞாயிற்றுக்கிழமையில் மிகவும் விசேஷம் என்னவென்றால் அது கன்னி தெய்வத்தை வழிபடக்கூடிய சிறப்பு நாளாகும். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும் தெரிந்து கொள்வோம். பல வீடுகளில் கன்னி தெய்வத்தை நினைத்து ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் பூஜை செய்வார்கள்.
ஒரு குடும்பம் அடுத்தடுத்த தலைமுறைகளை நோக்கி பயணம் செய்ய வேண்டும் என்றால் அந்த குடும்பத்திற்குக் கன்னி தெய்வத்தின் ஆசீர்வாதம் மிகவும் முக்கியம் என ஆன்மீகம் கூறுகிறது. அதன் காரணமாகவே ஆடி மாதம் ஞாயிற்றுக்கிழமைகளில் கன்னி பூஜை செய்யப்படுகிறது.
இந்த நாளில் கன்னி தெய்வத்திற்கு வழிபாடு செய்து வேண்டிக் கொண்டால் குடும்பம் சுபிட்சம் அடையும் என்பது ஐதீகம் ஆகும். அதேபோல திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், வேலை பாக்கியம் என அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் நாளாக இந்த ஆடி மாத ஞாயிற்றுக்கிழமை விளங்குகிறது.
டாபிக்ஸ்