Kayal Serial: எழில் இனி எனக்கு மட்டும்தான் சொந்தம்.. வேற யாரும்.. கொந்தளித்த நின்ற தீபிகா;கதி கலங்க வைத்த கயல்!
Aug 06, 2024, 01:33 PM IST
Kayal Serial: உங்கள் மகன் நான் இல்லை என்றால் எப்போது சாவதற்கு துணிந்தானோ அப்போதே அவன்தான் என்னுடைய கணவன் என்பதை நான் முடிவு செய்து விட்டேன். - கதி கலங்க வைத்த கயல்!
கயல் சீரியலில், நேற்றைய தினம் கயல் எழில்தான் தன்னுடைய கணவர் என்பதை உறுதியாக முடிவு செய்துவிட்டாள். இதையடுத்து அவள், அவளது அம்மாவை சந்திக்கச் சென்றாள். அப்போது கயல் அவளிடம், இனி உங்களது மகன் எனக்கு மட்டும்தான் அந்த இடத்திற்கு வேறு யாரையும் யோசிக்க வேண்டாம்.
நான் என்ன நடந்தாலும், கல்யாணத்தையே நடத்தியே தீருவேன் என்று உறுதியாக சொல்ல, அதிர்ந்து போன எழிலின் அம்மா, ஏற்கனவே நாம் பேசி இருந்த ஒப்பந்தத்தை திடீரென்று மீறுவதற்கு என்ன காரணம் என்று கேட்டாள். அப்போது உங்கள் மகன் நான் இல்லை என்றால் எப்போது சாவதற்கு துணிந்தானோ அப்போதே அவன்தான் என்னுடைய கணவன் என்பதை நான் முடிவு செய்து விட்டேன். அவன் இல்லாமல் இனி ஒரு நாளும் இருக்க முடியாது. நான் இல்லாமல் அவனாலும் இருக்க முடியாது.
ஆகையால் ஒரு அத்தையாக நடந்து கொண்டு எங்களது கல்யாணத்தை நடத்தி வையுங்கள் என்று கூறினாள். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அருகில் இருந்த தீபிகா நான் தான் எழிலின் மனைவியாக ஆகப்போகிறவள் நான். நீ அவனிடம் இருந்து விலகி விடு என்று ஆக்ரோஷமாக பேச, கயலோ நான் தற்போது மரியாதையாக பேசிக் கொண்டிருக்கிறேன். எனக்கு மரியாதை இல்லாமலும் பேச தெரியும் என்று மிரட்டினாள்.
இதை பார்த்து ஆக்ரோஷமான எழிலின் அம்மா ஏற்கனவே உன்னை ஆள் வைத்து கொல்ல முயன்ற எனக்கு, மீண்டும் அதே போன்று ஆள் வைத்து கொல்வதற்கு வெகுநேரமாகாது என்ற எச்சரிக்க, கோபமான கயல், நீங்கள் நேருக்கு நேராக மோதினீர்கள் என்றால், உங்களை நான் அடித்து விட்டு போய் சென்று கொண்டே இருப்பேன். ஆனால் முதுகில் மட்டும் குத்த கூடாது. இன்னொரு விஷயம் நீங்கள் எனக்கு செய்த விஷயங்களை நான் எழிலிடம் சொல்லிவிட்டால் என்ன நடக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும். ஏதோ மகனையும் அம்மாவையும் பிரித்த பாவம் எனக்கு வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று எச்சரித்தாள்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்