Agni Natchathiram: அக்னி நட்சத்திரம் தொடக்கம் - இதெல்லாம் செய்யாதீங்க மக்களே..!
May 04, 2023, 06:15 AM IST
அக்னி நட்சத்திர காலங்களில் என்ன செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்பது குறித்து இங்கே காணலாம்.
கத்திரி வெயில் என அழைக்கப்படும் அக்னி நட்சத்திரம் நாளை (மே 4) முதல் தொடங்குகிறது என வானிலை அறிஞர்களும், ஜோதிடர்களும் கூறுகின்றனர். பஞ்சாங்க முறைப்படி நாளை அக்னி நட்சத்திரம் தொடங்குகிறது.
சமீபத்திய புகைப்படம்
அக்னி நட்சத்திரம் இந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 4ஆம் தேதி தொடங்கி வரும் மே 28ஆம் தேதி வரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கமானது மிகவும் அதிகமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 21ஆம் தேதி தொடங்கி வைகாசி மாதம் 14ஆம் தேதி வரை அக்னி நட்சத்திரம் நடக்கிறது.
ஜோதிடத்தின் கணிப்பின் படி சூரிய பகவான் சித்திரை மாதம் மேஷம் ராசியில் நுழைகிறார். அதன் காரணமாகவே சூரியனின் கதிர்கள் நம்மைச் சுட்டுப் பொசுக்குகிறது. பொதுவாக கார்த்திகை நட்சத்திரம் அக்னி நட்சத்திரத்தின் சக்தியைக் கொண்டது. கார்த்திகை நட்சத்திரத்தின் தேவதையாக விளங்கும் அக்னி தேவன் இந்த காலகட்டத்தில் வெப்பத்தைக் கக்குவதால் இது அக்னி நட்சத்திரம் என அழைக்கப்படுகிறது.
மே 4ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடக்கும் அக்னி நட்சத்திரம் படிப்படியாகக் குறையத் தொடங்கும். இந்த அக்னி நட்சத்திர தோஷ காலம் முடிந்த பிறகு அனைத்து கோயில்களிலும் சிறப்புப் பூஜைகளும், வழிபாடுகளும் நடக்கும். இதை அக்னி கழிவு என்று கொண்டாடுவார்கள். அதேபோல் கிராமப் பகுதிகளில் அம்மன் கோயில்களில் கொடை விழா என்று கொண்டாடப்படுகிறது.
சுப காரியங்கள் செய்யலாமா?
இந்த காலங்களில் சுப நிகழ்ச்சிகள் செய்யலாமா எனப் பலருக்கும் சந்தேகம் எழுவது உண்டு. இந்த அக்னி நட்சத்திர காலத்தில் நிச்சயதார்த்தம், பெண் பார்த்தல், சீமந்தம், திருமணம் போன்ற காரியங்கள் செய்யலாம் அதில் எந்த சிக்கலும் ஏற்படாது. சுப நிகழ்ச்சிகள் குறித்து பேச்சு வார்த்தையும் நடத்தலாம், அதற்கான ஏற்பாடுகளும் செய்யலாம்.
செய்யக்கூடாதவை
இந்த அக்னி நட்சத்திர காலத்தில் புது வீடு குடி புகுதல், பால் காய்ச்சுதல், பூமி பூஜை செய்தால், காது குத்துதல், முடி இறக்குதல், மரம் வெட்டுதல், கிணறு வெட்டுதல், விதை விதைத்தல், குளம், கிணறு தோண்டுதல் உள்ளிட்ட செயல்களைச் செய்யக்கூடாது. அதேபோல் நிலம் மற்றும் வீடுகளில் பராமரிப்பு பணிகள் செய்யக்கூடாது. மேலும் வாகனங்களில் நெடுந்தூர பயணம் செய்யக்கூடாது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
டாபிக்ஸ்