தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  ’மாடி வீடு கட்டி மாஸ்காட்ட போகும் ரிஷபம் ராசி! அசுர குருவின் ஆட்டம் ஆரம்பம்!' சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

’மாடி வீடு கட்டி மாஸ்காட்ட போகும் ரிஷபம் ராசி! அசுர குருவின் ஆட்டம் ஆரம்பம்!' சுக்கிர பெயர்ச்சி பலன்கள்!

Kathiravan V HT Tamil

Nov 13, 2024, 03:50 PM IST

google News
சுக்கிர பெயர்ச்சி மூலம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தொழில் மற்றும் வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல காலம். கிரக பெயர்ச்சியால் செல்வங்கள் சேரக்கூடிய அமைப்பு உண்டாகி உள்ளது.
சுக்கிர பெயர்ச்சி மூலம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தொழில் மற்றும் வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல காலம். கிரக பெயர்ச்சியால் செல்வங்கள் சேரக்கூடிய அமைப்பு உண்டாகி உள்ளது.

சுக்கிர பெயர்ச்சி மூலம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தொழில் மற்றும் வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல காலம். கிரக பெயர்ச்சியால் செல்வங்கள் சேரக்கூடிய அமைப்பு உண்டாகி உள்ளது.

நவகிரகங்களில் அசுர குரு எனப்படும் சுக்கிர பகவானுக்கு தனி இடம் உண்டு. பொருள் சேர்க்கை, திருமணம், மகிழ்ச்சி, கலை, திறமை, அழகு, காதல், காமம், ஆடைகள், அலங்காரம், ஆபரணங்கள் ஆகியவற்றின் காரகத்துவம் கொண்ட கிரகமாக சுக்கிரன் உள்ளார். ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. கிரகங்களின் இயக்கம் மாறுவது அனைத்து ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப விளைவுகளை ஏற்படுத்துகிறது.

சமீபத்திய புகைப்படம்

மகரம் ராசிக்குள் நுழையும் சுக்கிரன்! இனி எல்லாமே மாறுது! காதல்! காமம்! பணத்தில் திளைக்க போகும் 5 ராசிகள்!

Nov 22, 2024 04:59 PM

சனி நேரான பாதை.. 30 ஆண்டுகள் கனவு.. இந்த ராசிகள் சூப்பரோ சூப்பர்.. தொட்டுப் பாருங்க தெரியும்!

Nov 22, 2024 04:55 PM

கேது பெயர்ச்சி.. 2025 முதல் இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. ஜாக்பாட் ராசிகள் நீங்கதான்

Nov 22, 2024 11:41 AM

குரு கொடூர யோகத்தை கொட்டுகிறார்.. சுக்கிரன் தாங்கி பிடித்து தாலாட்டும் ராசிகள்.. இனி பணத்தால் மெத்தை உருவாகும்

Nov 22, 2024 10:07 AM

உடுக்கை அடிக்க போகும் புதன்.. ஐயோ அம்மா என்று கதறப்போகும் ராசிகள்.. துரத்தி துரத்தி அடிப்பார்

Nov 22, 2024 10:01 AM

குரு மற்றும் சுக்கிரன் சேர்க்கை.. லட்சுமி தேவி இந்த மூன்று ராசிக்கு கருணை காட்டுவார்.. 2025 ஜாக்பாட் அடிக்க போகுது!

Nov 22, 2024 09:30 AM

பரிவர்தனை யோகம்

விருச்சிகம் ராசியில் இருந்த சுக்கிர பகவான் நவம்பர் 8ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 3 வரையிலான 26 தனுசு ராசியில் வாசம் செய்ய உள்ளார். சுக்கிரன் அதிபதியாக உள்ள ரிஷபம் ராசியில் குரு பகவானும், குரு பகவான் அதிபதியாக உள்ள தனுசு ராசியில் சுக்கிர பகவானும் அமர்ந்து பரிவர்தனை யோகத்தை உண்டாக்கி உள்ளனர். இந்த யோகம் ஆட்சிக்கு இணையான பலன்களை கொடுக்கும் என்பது ஜோதிட விதியாக உள்ளது.

ரிஷபம் ராசியும் சுக்கிரனும் 

சுக்கிர பெயர்ச்சி மூலம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். நீண்ட நாட்களாக தொழில் மற்றும் வேலைகளை மாற்ற விரும்புபவர்களுக்கு இது நல்ல காலம். கிரக பெயர்ச்சியால் செல்வங்கள் சேரக்கூடிய அமைப்பு உண்டாகி உள்ளது. 

ராசிக்கு 8ஆம் இடத்தில் சுக்கிரன் அமர்வதால் மறைமுக செல்வம் சேரும் காலம் உண்டாகி உள்ளது. பழைய முதலீடுகள் லாபம் ஈட்டும். உடல்நிலை பாதிப்புகள் விலகும். கமிஷம் தொழில், ரியல் எஸ்டேட் தொழில்களில் லாபம் கொழிக்கும். 

பரிவர்த்தனை யோகத்தால் லாபம்

பரிவர்த்தனை யோகம் காரணமாக மந்தமாக இருந்த முதலீடுகள் லாபகரமானதாக மாறும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வரும். பணிச்சுமையால் மன அழுத்தம் உண்டாகலாம் என்பதால் நிதானம் தேவை. பணியிடங்களில் நல்ல முன்னேற்றங்கள் உண்டாகும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு செல்வங்கள் சேரும். வங்கி மற்றும் வங்கி சார்ந்த விஷயங்களில் இருந்த பிரச்னைகள் படிப்படியாக தீரும். சிலர் புதிய வீடுகளை கட்டி குடிபுகுவீர்கள். 

கணவன் - மனைவி உறவில் நெருக்கம்

பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன் வரும் காலத்தில் யோகம் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். பயமின்றி தொடங்கும் செயல்களால் வருமானம் பெருகும். கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். உங்கள் காதலுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். சிலர் பழைய வாகனங்களை மாற்றிவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம் மூலம் ஆதாயம் கிடைக்கும். முருக வழிபாடு வாழ்வில் ஏற்பட்ட துன்பங்கள் விலகி நன்மைகள் கிடைக்கும். 

பொறுப்புத் துறப்பு

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

அடுத்த செய்தி