கும்பத்திற்கு இடமாறும் சுக்கிரன்! பண குவியலில் குதிக்க போகும் 3 ராசிகள்! இனிஎல்லாமே வெற்றிதான்!
Dec 04, 2024, 08:11 PM IST
சுக்கிர பகவான் ஆனவர் சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி அன்று இரவு 11.48 மணிக்கு நுழைய உள்ளார். சுக்கிர பகவானின் பெயர்ச்சி ஆனது சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை கொண்டுவரும்.
ஜோதிடத்தில், சுக்கிரன் மகிழ்ச்சி, செல்வம், மகிமை, செழுமை, ஈர்ப்பு ஆகியவற்றுக்கு உரிய கிரகமாக உள்ளார். சுக்கிர பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி ஆக 26 நாட்கள் வரை எடுத்துக் கொள்வார்.
சமீபத்திய புகைப்படம்
சுக்கிர பகவான் ஆனவர் சனி பகவானை அதிபதியாக கொண்ட கும்ப ராசியில் வரும் டிசம்பர் 28ஆம் தேதி அன்று இரவு 11.48 மணிக்கு நுழைய உள்ளார். சுக்கிர பகவானின் பெயர்ச்சி ஆனது சில ராசிக்காரர்களுக்கு நன்மைகளை கொண்டுவரும். சில ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மேன்மைகளை பெறுவீர்கள்.
சுக்கிர பெயர்ச்சியால் நன்மை பெறும் ராசிகள்:-
1. மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு சுக்கிர பெயர்ச்சியால் நன்மைகள் உண்டாகும். வீட்டில் பொருள் செல்வம் பெருகும். நிலம், கட்டிடம், வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. பணவரவு உங்களை செழுமைப்படுத்தும். தொலைதூரத்தில் இருந்து நல்ல செய்திகள் வரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றிகள் கிடைக்கும்.
2. மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி நன்மை தரும். நீண்ட காலமாக நிறைவடையாத பணிகள் முடியும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்குவீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். சில அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களை தேடி வரும். ஆன்மீக செயல்பாடுகளிலி ஆர்வம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை நிறைந்தவராக இருப்பீர்கள்.
3. கும்பம்
கும்பம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி மிகுந்த நன்மைகளை கொண்டு வரும். நிதி முன்னேற்றம் மற்றும் காரிய வெற்றிக்கு வழி பிறக்கும். காதல் உறவுகள் வலுப்பெறும். வேலையில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும். புதிய வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும். பெற்றோர்கள் உங்கள் செயல்பாடுகளுக்கு ஆதரவாக இருப்பார்கள். கடின உழைப்புக்கு பணியிடத்தில் பலன் கிடைக்கும்.
பொறுப்பு துறப்பு
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.