தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  Sukra Vakra Position : வக்ர நிலையில் சுக்கிரன் – இன்பத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு, துன்பம் விளையும்!

Sukra Vakra Position : வக்ர நிலையில் சுக்கிரன் – இன்பத்தின் மீது நாட்டம் ஏற்பட்டு, துன்பம் விளையும்!

Priyadarshini R HT Tamil

Aug 07, 2023, 07:13 AM IST

google News
Sukra Vakra Position : சேவைத் துறையிலும், மக்களிடமும் இன்ப உணர்வு தீவிரமாகும். இதனால் மக்கள் தவறான வழிகளில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புவார்கள். அதாவது மனம் அலைபாயக்கூடிய சூழல் இருக்கும். அதனால் சுக்கிரனின் வக்ர நிலை காலம் வரை மக்கள் சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.
Sukra Vakra Position : சேவைத் துறையிலும், மக்களிடமும் இன்ப உணர்வு தீவிரமாகும். இதனால் மக்கள் தவறான வழிகளில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புவார்கள். அதாவது மனம் அலைபாயக்கூடிய சூழல் இருக்கும். அதனால் சுக்கிரனின் வக்ர நிலை காலம் வரை மக்கள் சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

Sukra Vakra Position : சேவைத் துறையிலும், மக்களிடமும் இன்ப உணர்வு தீவிரமாகும். இதனால் மக்கள் தவறான வழிகளில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புவார்கள். அதாவது மனம் அலைபாயக்கூடிய சூழல் இருக்கும். அதனால் சுக்கிரனின் வக்ர நிலை காலம் வரை மக்கள் சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

சிம்மத்தில் வக்ர நிலையில் சனி பகவான் உள்ளார். இவருடன் செவ்வாய் மற்றும் புதன் செவ்வாய் சேர்க்கை நடக்கிறது. இதனால் உலகத்தில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படவுள்ளது என்று பார்ப்போம்.

சமீபத்திய புகைப்படம்

நாளை முதல்ஆட்டம் போட காத்திருக்கும் சூரியன்.. ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், மகரம் ராசியினரே ஜாக்பாட்தான் போங்க!

Nov 15, 2024 07:58 PM

புத்தாண்டில் மாறும் கிரகங்கள்! 2025ஆம் ஆண்டு கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்! செம அடி வாங்க போகும் 3 ராசிகள்!

Nov 15, 2024 05:35 PM

புதன் பெயர்ச்சி உச்சம்.. பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும் ராசிகள்.. இனி தவிர்க்க முடியாது..!

Nov 15, 2024 03:05 PM

அதிர்ஷ்ட கதவு திறந்தது.. சூரியன் தட்டி தூக்கிய ராசிகள்.. அக்டோபர் பண விளையாட்டு.. தவிக்கப் போவது யார்?

Nov 15, 2024 02:55 PM

சனி தலையில் கை வைத்தார்.. இந்த ராசிகளை கையில் பிடிக்க முடியாது.. 2025 வரை பணமழை.. என்ன நடக்கும்!

Nov 15, 2024 02:48 PM

சனி சதய நட்சத்திர பெயர்ச்சி.. இனி விட முடியாத ராசிகள்.. சொர்க்கம் பூமியில் வருகிறது..!

Nov 15, 2024 10:06 AM

கடந்த 23ம் தேதி முதல் சிம்ம ராசியில் சுக்ரன் வக்ர நிலையில் பயணிக்க தொடங்கினார். இந்நிலையில் இவர் ஆகஸ்ட் 7ம் தேதி பின்னோக்கி நகர்ந்து கடக ராசியில் நுழைகிறார். செப்டம்பர் 4ம் தேதி வக்ர நிலையில் இருந்து நேர்த்தி பயணத்தை கடகத்தில் தொடங்குகிறார். சுக்ர பகவான் வக்ர பெயர்ச்சி மேற்கொள்ளும் காலத்தில் என்ன நடக்கும்.

சிம்மத்தில் வக்ர நிலையில் இருக்கும் சுக்கிர பகவானுடன், நுண்ணறிவு, திறமைகளைத் தரக்கூடிய புதன் மற்றும் வீரம், கோபம், வேகத்தைத் தரக்கூடிய செவ்வாய் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இதனால் வஞ்சகம், மோசடி போன்ற சூழ்நிலைகள் உருவாக வாய்ப்புள்ளது. செவ்வாயும் சேர்ந்து இருப்பதால் சில மோசமான சக்திகள் வலுப்பெறும், இதனால் உலகளவில் பாதிப்புகள் ஏற்பட வாய்புள்ளதாக ஜோதிட நிபுணர்கள் கூறுகிறார்கள். புதனுடன் சேர்ந்து இருப்பதால் புதிய படைப்புகள் உண்டாகும்.

கேதுவை அதிபதியாக கொண்ட மகம் நட்சத்திரத்தில் சுக்கிரன் வக்ர நிலையில் உள்ளதால், சனியும் ராகுவின் நட்சத்திரத்தில் வக்ர நிலையில் உள்ளார். இதனால், நம் நாட்டில் பல மாநிலங்களில் அரசியலில் எழுச்சிக்கான சூழ்நிலைகள் உருவாகும்.

சேவைத் துறையிலும், மக்களிடமும் இன்ப உணர்வு தீவிரமாகும். இதனால் மக்கள் தவறான வழிகளில் மகிழ்ச்சியை அனுபவிக்க விரும்புவார்கள். அதாவது மனம் அலைபாயக்கூடிய சூழல் இருக்கும். அதனால் சுக்கிரனின் வக்ர நிலை காலம் வரை மக்கள் சுய ஒழுக்கம், கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம்.

மேலும் சுக்கிரன் வக்ர நிலையால் காற்றழுத்த தாழ்வு, சூறாவளி, புயல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தியாவின் வடமேற்கு மற்றும் தென் மேற்கு பகுதிகளில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும் குருவின் பார்வை சுக்கிரன் சஞ்சரிக்கும் சிம்மத்தின் மீது விழுவதால் சேதம் குறையும்.

சுக்ர வக்ர நிலையால் தனிமனித வாழ்க்கையில், புதிய முயற்சிகள் கைகூடும். நன்மைகள் நடக்கும். புதிய விஷயங்களை துவங்கும்போது பிரச்னைகள் ஏற்படும். பின்னர் வெற்றி கிட்டும்.

சுக்கிரன் சிம்மத்திலிருந்து கடக ராசிக்கு வக்ர நிலையில் மாறி சஞ்சரிக்கும்போது, மக்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். சுக்கிரனின் வக்ர நிலையும், அஷ்டம சனி போன்ற விஷயங்களால் உடல் நல பிரச்னைகள் ஏற்படலாம். 10ம் வீட்டு அதிபதியின் தசா நடக்கிறதோ அவர்களுக்கு வேலையில் முன்னேற்றம் ஏற்படும். பங்கு சந்தை முதலான முதலீடு விஷயங்களில் கவனம் தேவை.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை