Spirituality: உங்க மனைவி கர்ப்பமா இருக்காங்களா? - கணவர் இந்த தவறுகளை மட்டும் மறந்தும் செய்யவே கூடாது!
Feb 08, 2024, 06:58 AM IST
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் என்ன கடமைகளைச் செய்யக்கூடாது என பார்க்கலாம்.
திருமணமாகி புகந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் ஒரு பெண் தாயாகும் தருணத்தை பெறுகிறாள். அதுவரை குடும்பத்தில் ஒருத்தியாக இருந்த அவள் தாயான பிறகு குடும்பத்திற்கு எல்லாமாகிவிட்டாள். அந்த விஷயம் இரண்டு குடும்பங்களுக்கும் மகிழ்ச்சியைத் தருகிறது. அதனால் தான் கரு உண்டாகி இருக்கிறது என தெரிந்தால் உடனே அந்த பெண்ணை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.
சமீபத்திய புகைப்படம்
அப்பெண்ணிற்கு சீமந்தம் போன்ற நிகழ்ச்சி கொண்டாட்டங்கள் செய்து மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகிறார்கள். ஆனால் இந்த ஒன்பது மாதங்களில் கணவன் சில காரியங்களைச் செய்யக்கூடாது என்று பெரியோர்கள் கூறுகிறார்கள். அவ்வாறு செய்வது பிறக்கும் குழந்தைக்கு தீமை என்று கூறப்படுகிறது. மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் என்ன கடமைகளைச் செய்யக்கூடாது? இந்த விதிகளுக்குப் பின்னால் உள்ள பொருள் என்ன? என பார்க்கலாம்.
மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் இதை செய்யக்கூடாது
- மனைவி கர்ப்பமாக இருக்கும் போது கணவன் கடலில் குளிக்கு கூடாது.
- மரங்களை வெட்டவோ அல்லது பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கவோ கூடாது (விலங்கைக் கொல்வதாகக் கருதப்படுகிறது)
- 7 மாத வயதில் இருந்து பிரசவம் வரை ஷேவ் செய்ய வேண்டாம்.
- இந்த ஒன்பது மாதங்களில், ஒருவர் இறந்த உடலை எடுத்துச் செல்லக்கூடாது, இறுதி ஊர்வலங்களில் பங்கேற்கக்கூடாது, சடங்குகள் செய்யக்கூடாது.
- மனைவி கருவுற்றிருப்பதை அறிந்த பிறகு புனித யாத்திரை, வெளிநாட்டுப் பயணங்கள் செய்யக்கூடாது.
- படகு சவாரி, மலை ஏறுதல் போன்றவற்றை செய்யவே கூடாது என்று புராணங்கள் கூறுகின்றன.
- அடிக்கல் நாட்டுதல், புது வீட்டிற்கு செல்லுதல் போன்ற நிகழ்வுகளையும் தவிர்க்க வேண்டும்.
- மரங்களில் இருந்து முழுமையாக பழுக்காத பழங்கள் மற்றும் முழுமையாக திறக்கப்படாத பூக்களை அறுவடை செய்யக்கூடாது.
இதெல்லாம் தந்திரங்கள் அல்ல.. பந்தத்தை வலுப்படுத்தும் ஆரோக்கியமான வழிகள்.. இது மட்டுமின்றி பெரியோர்கள் கடைபிடிக்கச் சொல்லும் விதிகள், கொண்டாடப்படும் சடங்குகள், பண்டிகைகளின் போது கடைபிடிக்கப்படும் விதிகளுக்கு பின்னால் பல காரணங்கள் மறைந்து இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்